பிரபல பெண் ட்விட்டர் அனு அவர்களின் பார்வையில் இன்றைய உலகம். அவரின் மனம் திறந்த வெளிப்படையான பதில்களை இங்கே காணலாம்.
1)   உலகம் உங்களை எவ்வாறாக அறியப்படவேண்டுமென விரும்புகிறீர்கள்?
               நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையாய்....பாரதியின் புதுமைப்பெண்போல் இருக்கத்தான் ஆசை . 
2)  உங்களுக்கு பிடித்த உலகம் எவ்வாறாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?
    பொய், புரட்டு, ஊழல் இல்லாத நேர்மையான சமுதாயமாக.
3)      உங்களுடைய கடந்தகால நினைவுகளில் முக்கியமானவை?
     என் இனிய தோழிகளுடன் பழகிய கல்லூரி வாழ்க்கை . 
4)      நீங்கள் வெகுகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரியம்?
        ம்ம்ம்...அப்படி எதையும் அதிகமாக எதிர்பார்ப்பதில்லையே. 
5)      வாழ்க்கை பற்றிய உங்களது தத்துவம்?
         வாழ்க்கை இனியதுதான். அது இனிமையாவதும், சுமையாவதும் நம் கையில்   தான் இருக்கிறது என்பது உண்மைதான்.
6)      ட்விட்டருக்கு நீங்கள் வந்ததன் நோக்கம்? அது கிடைத்ததா?
         ம்ம்ம் ட்விட்டர் மிக பிரபலமானதால் இதில் இணையும் எண்ணம் வந்தது. 
7)     பெண் ட்விட்டர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? 
            அறிவுரை கூறுமளவிற்கு  எனக்கே அனுபவம் இல்லை இங்கே .
8)     ஒரு பெண் ட்விட்டராக நீங்கள் சந்தித்த சிறந்த, மோசமான ட்விட்டர் தருணங்கள்?
           சிறந்த தருணங்கள்...இங்கு சில நல்ல தோழமைகள் கிடைத்தைச் சொல்லலாம். மோசமான  தருணங்கள்  இங்கும் சில மனிதம் இல்லாத மனிதர்களைக் காணும்போது .     
             
9)     ஆண் ட்விட்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
         ஆண்களுக்குச் சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை .
10)   பொதுவாக ட்விட்டர் பற்றிய உங்களது ஆராய்ச்சி முடிவு?
         புத்தகங்கள், இசை, ஓவியம், கவிதை...இந்த வரிசையில் இப்போது கணிணியும்.
12)   ஒரு நாளிற்கான உங்களது செயல்களை விளக்கவும்?
        ---- 
13)   வெளியே சுற்றுவது/வீட்டில் இருப்பது இவற்றில் நீங்கள் அதிகம் விரும்புவது?
       சுற்றுலா செல்வது, பார்க்காத இடங்களை, அதன் சிறப்பியல்புகளோடு பார்ப்பது பிடித்தமான விஷயம் .
14)   தூக்கம் பற்றிய உங்கள் கருத்து?
         தூக்கம்.......மனிதனுக்கு சரியான அளவில் தினமும் தேவைப்படும் ஓய்வு .   சாவுக்கான ஒத்திகை என்றும் சொல்லலாம் .
15)   காதல் பற்றிய உங்களுடைய செய்தி?
         ஆழ்மனதில் தோன்றும் பரிசுத்தமான நேசம். இதைக்கொச்சைப்படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்லக்கடவது !
16)   ஆண் பெண் நட்புகளின் வரைமுறையாக நீங்கள் குறிப்பிடுவது?
         வரைமுறை அவரவரின் மனதிற்குத்தான் தெரியவேண்டிய விஷயம் .
17)   பெண்களின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவைகள்?
          சில நேரம் பெண்களேதான். அவர்களது நுட்பமான மனத்தடைகள்.
18)   இன்றைய காளையர்க்கும் வனிதையர்க்கும் உங்களின் வழிகாட்டுதல்?
        வழிகாட்டும் அளவிற்கு நான் ஒன்றும் வளரவில்லையே :(
19)   பெண்விடுதலை, கருத்து சுதந்திரம், சமுதாயத்தின் மரியாதை பற்றி?
        பெண்விடுதலை இன்னும் ஆண்களின் கையில் இருப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை.
         மற்றவரை பாதிக்காத கருத்துகளுக்கு எப்போதும் சுதந்திரம் தான் இங்கே :)
         சமுதாயத்தின் மரியாதை ஒருவரிடம் இருக்கும் செல்வத்தை மட்டுமே  அளவிடுகிறது.. அவர்களின் மனதை பார்த்து அளவிடும்போதுதான் அது நிஜமான  மரியாதையாக இருக்கும் .
20)   பெண்களை கவர 4 டிப்ஸ்?
      உண்மையாக இருப்பதும், உரிய மரியாதை கொடுப்பதும், ஒரு விஷயத்தை  பிரச்னையை சமாளிக்கும் பக்குவமும், நாகரிகமாக இருப்பதும்,  எப்போதும்  பெண்களைக் கவரும்.
21)   ஆண்களிடம் எதிர்பார்க்கும் 4 நல்ல குணங்கள்? வெறுக்கும் 4 கெட்ட குணங்கள்?
        மேலே சொன்னவையே எதிர்பார்க்கும் குணங்கள்.
         வெறுப்பவை இதற்கு எதிர்ப்பதங்கள் தான் :)))
       (ஒரே கேள்வி ரிபீட் அடிக்கறீங்களே சாரே :( (கலாய்ச்சிட்டாங்களாமாம்! ) 
22)   செல்போன், கம்ப்யூட்டர், வெளியூர் வேலை போன்றவற்றால் குடும்பம், சொந்தம், நட்பு போன்றவை அடைந்த நிலை?
         நட்பும், சொந்தமும் இந்த தொடர்புசாதனங்களால் வளரத்தான் செய்கிறது. 
குடும்பத்திற்குச் செலவிட தான் நேரம் கிடைப்பதில்லை நமக்கு :(
23)   ஜெயலலிதா, சோனியா காந்தி... தலைமைப் பண்புகளாக நீங்கள் காணும் குணங்கள்?
       ஜெயலலிதாவின் தைரியம், துணிச்சல், அறிவுக்கூர்மை - நிச்சயமாக இவையாவும் தலைமைப்பண்புகள்தான்.
மற்றவரிடம் அத்தகைய பண்புகள் எதையும் காணவில்லை - மன்னிக்கவும் !
24)   ஒரு ஞான குருவாக நீங்கள் உலகத்துக்கு சொல்லவிரும்பும் மற்ற செய்திகள்?
 மன்னிக்கவும் :) 
நீதி: போய் பிள்ளைகுட்டிய படிக்க வையுங்கடா! 


 







 Please explain how many Nuclear reactors are under construction now in china?
 Please explain how many Nuclear reactors are under construction now in china?






