Sunday 6 November 2011

போடா வெண்ணை! - விளக்கவுரை

என் இ.வா. டமில் மாக்களே!

ஆனா ஊனா, போடா வெண்ணைன்னு திட்டுவாய்ங்க நம்மூர் அண்ணன்மார்கள். அதற்கு இரண்டு காரணம்,

1) Eco -Friendly யாக சைவ முறையில் (டூத் பேஸ்ட்ல பச்சை வட்டம் போட்ருப்பாய்ங்களே) திட்டி தன் எதிர்ப்பை தெரிவிக்க

2) தான் திட்டினதுக்கு என்ன அர்த்தம்னு எவனுக்குமே(அவனுக்கும்) தெரியக்கூடாதுங்கிற நல்லெண்ணதிலயும்

இப்படி, திட்டுபவருக்கும் திட்டுவாங்குபவருக்கும் பிரியாத வார்த்தை தான் வெண்ணை. ஆனால் முருகன் எனக்கு இன்னிக்கு மத்தியானம் கனவுல வந்து இந்த மூடநம்பிக்கையா உலகத்தை விட்டு விரட்டும்படி பணித்திருக்கிறான்.

எனவே, விஷயத்துக்கு வருவோம்.

திருவள்ளுவர் தன்னோட ஒரு குறல்ல இதப்பத்தி வெளாவரியா வெளக்கிருக்காரு. அந்த குறலு...

”வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு”

இதுக்கு இன்னா அர்த்தம்னா, அறிவுகெட்டவன் யாருன்னா, எவனெவனெல்லாம் தன்னைத்தானே அறிவாளின்னு சொல்லிகிட்டு திரியிறானோ அவனே தான்!

மேட்டர் என்னானா, வெண்மை =அறிவுகெட்ட

இதுலேருந்து இன்னா பிரியிதுன்னா, இந்த திட்றவார்த்தைய ஆரம்பிச்சு வச்சது நம்மாளுதேன். அதுகாலப்போக்குல போடா வெண்மை!... வெண்ணை’ன்னு மருவிடுச்சு.

ரொம்ப நீட்ட விரும்பல..... ஏன்னா நம்மாளுதான் நீட்டலும் மலித்தலும்....னு...

சரி சரி! பிரியிது.

பி.கு. இதுதான்யா எழுத்தாளனா நான் எழுதுன முதல் காவியம்!

No comments:

Post a Comment