Thursday 24 November 2011

ஒரு பொண் மாலைப் பொழுது!

ஹிஹிஹி! ஆமா, அது ஒரு பொண்ணு பார்க்கப்போன மாலைப் பொழுது!

ரொம்ப நல்ல குடும்பத்து பெண் என்று தரகர் சொன்னப்பவே மிடறு விழுங்கி அமர்ந்தேன். அரைமணி நேரம் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எல்லாமே என்றால் எல்லாமே அல்ல, அந்த மைசூர்பாகை மட்டும் கடிக்கமுடியவில்லை, அதனால் அச்சுவெள்ளத்தை நக்குவதுபோலவே நக்கிக்கரைத்துவிட முயன்றுகொண்டிருந்ததில் உலக இம்சைகளிலிருந்து விலகி அரைமணி நேரம் ஓடிவிட்டது.

திடீரென்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தப்பன் முதுகில் தட்டி இயல்புக்குள் இறக்கிவிட்டுவிட்டார். நிதானித்துக்கொண்டு என்ன, என்னவென்று கேட்டதில், பொண்ணப்பெத்த புண்ணியவான் ஏதோ கேக்குறாரு பதில் சொல்லென்று, இதுவரை எந்த இன்டர்வியூவிலும் பதில் சொல்லாத என்னை முதன் முறையாக விரதம் கலைக்க வைத்தார்கள்.

முதல் கேள்வியே கவுண்டமணியை பார்த்து செந்தில் கேட்டது மாதிரியான ஒன்று. துக்கம் தொண்டையை அடைக்க உடனே ஒரு பதில் சொல்லிவிட்டேன். பயப்படவேண்டும், பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டேன் என்பதைதான் அவ்வாறு சொன்னேன்.

கேள்வி இதுதான்! தம்பி, உங்கள எல்லாருக்கும் புடிச்சிருக்கு, ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம், இந்த HIV டெஸ்ட் மட்டும் எடுத்துகிட்டு ரிசல்ட்ட கொண்டுவந்தீங்கன்னா மற்ற விசயத்த பேசிக்கலாம்?

நான்: சரிங்க மாமா சார், அதே போல ஒங்க வீட்லயும் பொண்ணோட அப்பா அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கான்னு ஒரு டெஸ்ட் எடுத்து குடுத்திட்டீங்கன்னா, தகுந்தமாதிரி செலவுக்கு வாங்கிகலாம்னு.... (பெற்றோருக்கு இருந்தா பெண்ணுக்கு வருமாம்ல) மத்தபடி இத வரதட்சணை கீழ வராதுன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.

எப்படியும் இந்த பொண்ணு அமைஞ்சிரனும்னு வர்றவழியில ஏசு சாமிலேருந்து எல்லா சாமிக்கும் மாலை போடுறதா வேண்டிகிட்டே வந்தேன். என்னங்க.... எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும்ல!

பின்குறிப்பு: இது என் சொந்தகதை என்ற பொய்யான வதந்தியை யாரும் நம்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அப்பாடா!

10 comments:

  1. Dai poiduuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  2. >>பின்குறிப்பு: இது என் சொந்தகதை என்ற பொய்யான வதந்தியை யாரும் நம்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அப்பாடா!

    ஹா ஹா தவளை தவளை

    ReplyDelete
  3. யார் கதையா இருந்தாலும் உள்ள இருக்குற விஷயம் முக்கியம். ஜாதக பொருத்தம் பாக்குறத விட ஃபுல் பொடி செக்கப் பண்ணி ரிசல்ட் பொருத்தம் பாக்குறது ஒண்ணும் தப்பு இல்லை..

    ReplyDelete
  4. நண்பா உங்க கமெண்ட்-ல word verification எனேபிள் பண்ணி இருக்கீங்க அதை கொஞ்சம் எடுத்து விட்டீங்கன்னா கமெண்ட் போடுறவங்களுக்கு ஈசியா இருக்கும்

    ReplyDelete
  5. பண்ணிட்டேன் ரமேஷ் பாபு! நன்றி!

    ReplyDelete
  6. ivaru periyaaaa Bloggerungoooooooooooo

    ReplyDelete
  7. manosenthilkumar fan25 November 2011 at 05:26

    I am from pakistan your blog is good

    ReplyDelete
  8. தாய்மனம்26 November 2011 at 08:56

    காலம் மாறிவருது # தேவைகளும் மாற்றிக்க வேண்டியது அவசியமாகிறது. கற்பு என்னும் நிலை இருவருக்கும் போது என்று அன்றே திருவள்ளுவர் சொன்னார். # proper medical checkup for true compatibility of couple with regards to producing children without major flaws are getting already taking place in even eastern world

    ReplyDelete
  9. அது யாரு மனோசெந்தில் ஃபேன் ப்ரம் பாகிஸ்தான். உங்க உட்லாலங்கடிக்கு அளவே இல்லையா? :)

    ReplyDelete
  10. மேலோட்டமா நகைச்சுவையாக பட்டாலும், பொதுவா மெடிகல் அட்வைஸ் கேட்டுட்டு திருமணம் செய்து கொள்வது சரியே!

    ReplyDelete