Friday 25 November 2011

அந்நிய நேரடி முதலீடு! - அரசின் விளக்கம்!

என்னாயா நல்லாருக்கீங்ளா! பாத்து ரொம்ப நாளச்சு! நம்மூருக்குள்ள வெள்ளக்காரய்ங்க வந்து பொட்டிகடை  வைக்க போறாய்ங்களாம்ல!? அத என்னன்னு வெவரமா கேட்டுபாப்பமா!?


அந்நிய நேரடி முதலீடுன்றது வெளிநாட்டுகாரய்ங்க நம்மூருக்குள்ள பணத்த போட்டு தொழில் வச்சு வுடுறது. அதுல 20%, 50% அப்டீ இப்டீன்றாய்ங்கள்ள, அப்டீன்னா, இங்க நடக்குற கடையில அவன் பங்கு அம்புட்டு, அதத்தேன் அப்புடி சொல்றாய்ங்க!

இப்ப கோதாவுல குதிச்சுருவோம்!
அந்நிய நேரடி முதலீடுன்னா என்னன்னு தெரியனும்னா, இத படிங்க  http://en.wikipedia.org/wiki/Foreign_direct_investment 

சில்லறை வியாபாரத்துல, அதாவது நம்மூரு பொட்டிகடையில அவய்ங்க கைய வைக்கிறத பத்தி இப்ப பேச வேண்டிய அவசியத்த தெரிஞ்சுக்க... http://www.firstpost.com/business/fdi-fineprint-easing-fdi-doesnt-ease-problems-plaguing-retail-140131.html

இப்ப நம்ம சச்சரவுக்கு வருவோம்!
இவய்ங்க காச கொண்டுக்கு வந்து கொட்டுனா நல்லதுதானேன்னு கேக்கலாம். ஆனா! அதுல ஒரு சிக்கல் இருக்கு! இன்னிக்கி என்னன்னா, ஒருசிலர பாதி பங்கு பார்ட்னராவும் மற்ற சிலவற்றை முழுசா ஓனராவும் இருந்துகிடுறதுக்கு நம்ம கவர்மெண்டு சரிக்குடுத்திருச்சு. இதுல தான் பிரச்சினையே! அவன் இங்க வந்துட்டா, நம்மூரு செட்டியாரு கடைல விக்கிறதவிட வெல கொறச்சு விப்பாய்ங்கன்னு கவர்மெண்டுக்கு எந்த களவானிப்பெய சொன்னானோ தெரியல! ஆனா! இவன் வந்துட்டா என்னென்ன நடக்கும்னு ஒரு சின்ன டிரெய்லர் ஓட்டி காமிக்கிறேன்!

1) பெட்டிகடையவிட சீப்பா, ஸ்டோரு கடைவச்சு விப்பாய்ங்க! பாக்க நல்லாவும் இருக்கும்!
2)நம்மூருக்கு பருத்தி வாங்க வார நாடாரு ஊருப்பக்கம் போயி ஏதாவது வேலைய பாக்கவேண்டியதுதேன். ஏன்டா, அவன் விக்கிற சட்டை விலைக்கும் நம்மூரு பருத்தி விலைக்கும் சம்பந்தமே இருக்காது!
3)தக்காளியோ, கத்திரிக்காயோ, வெண்டிக்காயோ புடுங்கிகிட்டு போயி கமிசன்கடையில ஒக்காந்துருக்க தேவையில்ல. நம்ம தோட்டத்திலயே வந்து வாங்கிகிருவாய்ங்க!(ஐ! ஜாலி!)
4)கலர்கலரா சோப்பு சீப்பு கண்ணாடிலாம் வெள்ளக்காரய்ங்க போடுறமாதிரி ஐட்டமெல்லாம் நம்மூர்லயே கெடைக்கும்.(நம்மளும் ரஜினிதேன்!)
5)துபாய்க்கு போனவய்ங்க வாங்கிவராத செண்டெல்லாம் நம்மளே இங்க வாங்கிகிரலாம்!(பட்டிக்காட்டான்னு எவனும் சொல்லிறமுடியாது!)
6)இன்னிக்கி நம்ம விக்கிர வெலயவிட அவன் ஒருரூவாயாச்சும் சேத்துதேன் தந்து வாங்கிகிட்டுபோவான்! (ஒரே பாட்டுல பணக்காரனாகிரலாம்!)
7)மருந்தடிக்க காசுகுடுத்துட்டு தக்காளி கூடைய தூக்கிகிட்டுபோனதும் காச கழிச்சுகிற ஏவாரிலாம் செத்தாய்ங்க!
................
இப்படி இன்னும் நிறைய இருக்கு. ஆனா இது எல்லாம் கவருமெண்டு நம்மகிட்ட சொல்லி புரியவைக்க நினைக்கிறதத்தேன் இங்க சொல்லிருக்கேன்!

உள்குத்த அடுத்த ப்ளாக்ல எழுதுறேன்! அதுக்குள்ள எல்லாரும் கத்திய தீட்டிக்குங்க!

No comments:

Post a Comment