Friday 18 November 2011

காந்திமதி- உன்னைப் போல் ஒருத்தி!

நாம் பிறந்தவுடன் தாய் தந்தையர் அறிமுகப்படுத்துபவர்களை தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சின்னம்மா... என்றெல்லாம் நினைவில் இருத்தி, கடைசியில் ஓர் நாள் அவர்கள் இறந்ததற்காக ஒரு துளி கண்ணீரேனும் விடுகிறோம்.

அதே போல் சினிமா மூலம் அறிமுகமான ஆயிரக்கணக்கானோரில் ஒரு சிலரை மட்டும் நாம் நம் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்கிறோம்.

அப்படிப்பட்ட ஒரு நடிகை, எனக்கு பிடித்த ஒரு ஆள் இல்லை இல்லை என் உறவுக்காரி, அப்பத்தா, பாட்டி, அமத்தா இவற்றில் ஏதாவது ஒன்றாக நினைத்து எனது பிளாக்கில் ஒரு தனி போஸ்ட் போடவேண்டுமென்ற என் நெடுநாளைய கனவை இங்கே உங்கள் முன் பகிர்கிறேன்.

உண்மையான பாசத்துடன் என்றும் அழியா அவளின் நினைவை எனது பிளாக்கில் செதுக்கி வைக்கிறேன். கண்ணீர் அஞ்சலி!

1 comment:

  1. காந்திமதியை நானும் ஒரு நடிகையாக பார்க்க முடியவில்லை # நடிகைகளுக்கே உரிய எந்த குணமும் அவரிடம் காண முடியாது. நாம் கடந்து வந்த கிராமத்து பெண்களின் எதார்த்த வடிவம் தான் காந்திமதி # இந்த பிளாக்கில் காந்திமதி பற்றி எழுதிய ஒவ்வொரு வரியும் உண்மை உணர்வை பிரதிபலிக்கிறது

    ReplyDelete