Saturday 5 May 2012

நாட்டுப்புறத்தானாகிய நான்!


அதென்ன மாயமோ, என்னமோ தெரியறதுல்ல எனக்கெதுவுமே வெளங்கினதில்ல!

தமிழ்நாட்டுலயே அந்த கோர்ஸ் உள்ள ஒரே காலேஜ்ல சீட் வாங்கி உள்ளபோயி ஒக்காந்தா, எல்லாம் பெரிய எடத்து பச்சக்கிளிங்க! ஈரோடு பக்கமிருந்து தான் அதிகம்!

அவள் ஏதோ கேட்க, நான் ஏதோ சொல்ல, அருகிருந்தவள் “சரியான நோஸ் கட்டுடீ”ன்னா. எனக்கு எதுவுமே புரியல.

சிஸ்டர், சிஸ்டர்னு “நெருக்கமா” பேசிக்கிட்ருந்தாய்ங்க பீட்டர்களின் பேரன்கள். ”அக்கா” என்ற உறவு அதற்காகத்தான் ஆசிர்வதிக்கப் பட்டிருப்பதை அப்போதும் உணராமல்.

எல்லோரிடமும் சகஜமாகப் பழக நினைத்தேன், குரூப் குரூப்பாக ஜெராக்ஸ் எடுக்கச் சென்றார்கள். டீக்கடைக்குத் தான் செல்கிறார்களென்பதை அறிந்திலன்.

உடன்படித்த தேவதைகளெல்லாம் அருகே வந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதொ வினவ, அவர்கள் எதிர்பார்த்த பதிலைச் சொல்ல என்னிடம் இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட்(பின்புல ஆராய்ச்சிப் பொரணி) இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 3பேராவது என்னை நிறைய எதிர்பார்த்தார்களென்பது அடுத்த 5ஆண்டுகள் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை.

எந்த ஆசிரியரிடமும் வகுப்பைத் தவிற வேறு இடத்தில் சென்று பேசியதில்லை. எந்த நேரத்திலும் அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்ததில்லை. அவுத்துவிட்ட மாடு மாதிரி திரியிற இவனுக்கெதுக்கு மார்க்குன்னு பலபேர் எண்ணியிருக்கக் கூடும்.

எந்த ஒரு டூர் சென்றாலும் சின்ன ஹோட்டல் எங்க இருக்கு என்று தேடி அலைவதற்கே நேரம் சரியாயிருக்கும். (என்னையும் ஒரு குரூப் பின் தொடர்ந்ததென்றும், கன்னியாகுமரியில் அப்படிப்பட்டதொரு ஓட்டலில் புழுபூச்சி சாம்பார் சாப்பிட்ட கதையும் உண்டு) இதனாலேயே ஓட்டல்களை கண்ணாலேயே தேர்ந்தெடுப்பதில் வல்லமை பெற்ற திருவிளையாடலும் உண்டு

மாலை நேரங்களில் கடைத்தெருவில் சுற்ற “குபேரனின்” ஆசி இல்லாததால் விளையாட்டு மைதானமே கதி என்று அனைத்து விளையாட்டையும் கற்றுக் கொண்டதும் வரலாற்றில் உள்ளடக்கம்


எனக்குத் தெரிந்த எளிய வழியில் ஏன் அந்த காரியத்தை முடிக்கக் கூடாதென்று மேனேஜரிடம் வாதாடிய என்னை தனியாகக் கூப்பிட்டு எட்டிகொயட் கத்துக்கொடுத்த காலமும் உண்டு

கடைசியா, எல்லாத்தையும் விட்டுப்புட்டு சொந்தமா நாமே ஒரு தொழில ஆரம்பிப்போம்னு இந்தியா வந்தா, இங்க அட்வைஸ் எல்லாமே, “ஒரு ஸ்டேஜிக்கு வந்த பிறகு அதை மெய்ண்டைன் பண்ணனும் சார். அத விட்டுட்டு கேரியர் குரோத் கர்வ நோஸ்டைவ் அடிக்க விட்டு எர்ராட்டிக்கா லைப் கிராப் வரையக்கூடாது” என்று போதிமர தீட்சை அளிக்கும் நண்பர்களும் என்னுடனே!

சிந்தனையில் தெளிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் துணிவும் மட்டுமல்ல, சூழ்நிலையையும் கிரீனாக வைத்திருக்கும் போது தான் மனம் அமைதியடையும். வாழ்க்கை இறகாய் மிதக்கும்!

 
எவ்வளவோ பண்ணிட்டோம்.......