Monday 7 November 2011

நான் அறிந்த அப்துல்கலாம்!

அப்துல் கலாம் என்பவர் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. அவரால் இந்திய ராக்கெட் டெக்னாலஜி தன்னிறைவு பெற்றதுடன், உலகநாட்டு செயற்கைக்கோள்களையெல்லாம் இந்திய மண்ணிலிருந்து ஏவ வித்திட்டவர்.

கடலுக்கடியில் நடக்கும் காண்டினெண்டல் ஷிப்ட் முதல் கடாபி குளித்துக்கொண்டிருக்கும் சோப்புவரை உளவுபார்க்கும் அதிநவீன உளவுத்துறை சாதனங்களையும் நெட்வொர்க்கையும் கொண்ட அமெரிக்காகாரன் கண்ணுலயே மண்ணத்தூவிட்டு, “புத்தர் சிரித்தார்”னு கூலா சொன்ன ஒரு இந்தியன், தமிழன்.

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த ஒரே சயின்டிபிக் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் IISC, Bangalore தான் என் சிற்றறிவிற்கு எட்டியவரை!(நான் அங்கே தங்கி அந்த லேப் பெசிலிட்டிகளை எல்லாம் பார்த்தவன் என்ற முறையில், என் நண்பன் அங்கே இண்டகரேட்டட் பி.எச்.டி. படித்தான், இருவரும் தினமும் சப்ஜெக்ட் சம்பந்தமாக பேசிக்கொண்டோம் என்ற முறையில். (சப்ஸ்டேண்சியேட்டிங் ஸ்டேட்மெண்ட்!)) அந்த இன்ஸ்டிட்யூட்டுக்கென்று சில விதிமுறைகள், அதிலொன்று டாக்டரேட்(Ph.D) பண்ணாத ஒருவர் புரொபசராக சேருவதற்கு தகுதியற்றவராகிறார். இதற்காகத்தான் ஐயா அப்துல் கலாமை அவர்கள் நிறாகரித்தனர். திறமை இல்லை என்றல்ல!


அதன்பிறகு அண்ணா யுனிவர்சிட்டியில் அவர் பேராசிரியரானது அனைவரும் அறிந்ததே!

அவர் பிரெசிடெண்டாக இருந்த போது(2004-05) அவரிடமிருந்து(அவரது அலுவலகத்திலிருந்து) ஒரு கடிதம் CRIDA(Central Research Institute for Dry Land Agriculture) ஹைதராபாத்திற்கு வந்தது. அதில் பயோப்யூயல் (Bio-Fuel) தயாரிக்க தேவையான Jatroba(ஜட்ரோபா-ஒரு வகை காட்டாமணக்கு) பற்றிய ரிசர்ச் பேப்பர்களை அனுப்பச் சொல்லி கேட்டிருந்தது. அதாவது இந்த தாவரத்தை வளர்க்கும் முறைகளை கேட்டிருந்தார்கள். அன்றைய கால கட்டத்தில் அந்த தாவரத்தை ஒரு காட்டுச்செடியாக மட்டுமே பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதன் பல்வேறு சிற்றினங்களை(species) பற்றிய ஒரு சிறுசெய்தி மட்டுமே இருந்தது, அதன் வகைகள்(Varieties) டெவலப் செய்யப்படவில்லை. அந்த பொறுப்பை என் நண்பன் ஒருவனின் தலையில் போட்டுவிட்டார் அதன் தலைவர். அப்போது அவனும் நானும் சேர்ந்துதான் அதற்கான மெட்டீரியலை தயாரித்து அனுப்பினோம். ஆனால் அடுத்த ஒரு மாதத்திலேயே ஹைதராபாத் வந்திருந்த கலாம் அவர்கள், ஆந்திர அரசின் முன்னோடி திட்டமான பயோ ப்யூயல் திட்டத்தையும் அதற்கான் ஒரு பேக்டரியையும் தொடங்கிவைத்தார்.

அது அனைத்து நாளிதழ்களிலும் ஆகா ஓகோவென புகழப்பட்டு அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் வருங்காலமே அதுதான் என கொண்டாடப்பட்டது. எனக்கும் என் நண்பனுக்கு மட்டும் எதுவும் விளங்கவில்லை!

2006-07ம் ஆண்டுகளில் ஆந்திரா முழுவதும் உள்ள கிராமங்களுக்கு நான் மற்றொரு காரியத்திற்காக சென்றபோது அங்கு நான் கண்டது ஜட்ரோபாவால் ஏமாற்றப்பட்ட அப்பாவி விவசாயிகளின் முகங்கள் தான். இன்று அந்த ஜட்ரோபா பெயரளவில் எக்சிஸ்டிங்.

அதன்பின், அதே போன்றதொரு ஸ்டடி ரிப்போர்ட் நான் சப்மிட் பண்ணியது “சோலார் பவர் - ஸ்கோப்ஸ்(Solar power - Scopes). அந்த நேரத்தில் காற்றாலைகளை ஒருசில இடங்களில் மட்டும் பைலட் முறையிலேயே நிறுவியிருந்தார்கள், இனிசியல் காஸ்ட் அதிகமென்பதால். ஆனால் இன்று அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது(அட்லீஸ்ட் எங்க டிஸ்ட்ரிக்ட்ல). ஆனால் இதற்கும் சோலார் பவர் போன்ற சீசனல் லிமிடேஸன்ஸ் உண்டு.

அணுசக்தி என்பது ஒரு பாராவில் சொல்லக்கூடிய செய்தி அல்ல. என் இரண்டு வருட ரிசர்ச்சை(அணுசக்தியின் விளைவு பற்றி) முடித்த பின்பு, ஒரு சயின்டிபிக் ரிசர்ச் போட எனக்கு இரண்டரை ஆண்டு காலம் பிடித்தது. எனவே இதை பற்றி தெரிந்துகொள்ள நிறைய படிக்கவேண்டும். யாரோ ஒரு புரொபசர் எழுதிய புக்கை மட்டும் படித்துவிட்டு எழுதக்கூடாது. ஏனென்றால், எனக்கு தேவையான ரிசல்ட் வேண்டுமென்றால் சிமிலர் ரிசல்ட் பேப்பர்களை மட்டுமே சேகரித்து ஒரு புக் போட்டு விட முடியும். எனவே இதை பற்றி நீங்களே படித்து புரிந்து கொள்ளுங்கள்.


இந்த ஆர்ட்டிகிலின் முக்கிய நோக்கம் அப்துல் கலாம் அவர்கள் எதற்காக கூடங்குளம் வந்தார் என்பது எனக்கு தெரியாது. அதே போல் அவருக்கு எந்த அளவுக்கு இதைப்பற்றி தெரியும்னு கேட்கப்படும் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. ஆனால் எனக்கு தெரிந்ததையும் நான் பார்த்த அப்துல் கலாம் அவர்களையும் உங்கள் முன் ஒழிவுமறைவின்றி சொல்லியிருக்கிறேன்.

மற்றபடி உங்கள் முடிவே இறுதியானது!

நன்றி!


No comments:

Post a Comment