Monday 21 November 2011

சாப விமோசனம்!

இந்தியாவ பத்தி யாராரோ கனவு காணும்போது இந்த மண்ணின் மைந்தன் நம்ம மாயாண்டி காண்பதில் எந்த தப்பும் இல்லைதானே. வருஷநாட்டுப்பக்கம் உள்காட்டு ஏரியாதான் அவன் உலகம். அப்பனும் ஆத்தாலும் செத்துப்போயி பலவருசமாச்சு. ஊருக்குள்ள என்பொண்ணக்கட்டிவைக்கிறேன்னு யாரு சொன்னாலும் சரி, அவங்கவீட்டுவேலையில இருந்து தோட்டவேலை வரைக்கும் எல்லாத்தையும் ஒத்தை ஆளா முடிச்சு குடுக்கிறதுதான் அவன் பொழப்பே!.

மாயாண்டிக்கு என்ன வயசாச்சுன்னு தெரியல. ஆனா மேலே சொன்னபடி இவன் கட்டாமல் விட்ட பெண்களெல்லாம் கல்யாணமாகி, அவர்களுக்கு இப்போது கல்யாண வயதில் பெண்ணே இருக்கிறார்கள். சரி சரி விடுங்க, இப்போ மேட்டருக்கு வருவோம்.

என்னதான் உலகமே இவனுக்கு உதவவில்லையென்றாலும் அவனுக்கு உலக அமைதியில் பெரும் பங்கு உள்ளது. அவன் ஓட்டுப்போட்ட கட்சிதான் இதுவரை ஆட்சிக்கு வந்து இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்ததும் அதில் ஒரு காரணம்.

இன்று என்னமோ ரொம்பவே எரிச்சலாக வந்ததில், செட்டியார் தோப்பில் காலை நீட்டி படுத்துக்கொண்டான். உறக்கமும் நினைவுமான ஒரு மயக்கநிலையில் தான் காற்றில் தவழ்ந்து வந்தது அந்த ஞானோதயக் காற்று. இந்தியாவின் மக்கள்தொகை நூறுகோடிக்கு மேல் சென்றுவிட்டது என்றும் விலைவாசி எல்லாம் ஏறிவிட்டதென்றும் ரேடியோ பொட்டி சொல்லிக்கொண்டிருந்தது. தன்னால் என்னென்ன செய்யமுடியுமென யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். என்ன நடந்தாலும் சரி, கல்யாணம் மட்டும் பண்ணிக்கொள்வதில்லை என்று தீர்மானித்தான்.

கம்பீரமாக ஊருக்குள் நடந்து வந்தான். டேய்! மாப்பிள்ளை இந்த மாட்ட புடிச்சு கட்டிவச்சுட்டு போடான்னு கூப்பிட்டுக்கொண்டிருந்த ராமசாமி மாமாவின் குரல் காதில் விழாதது போல் நடந்துகொண்டே இருந்தான். பாவம் அன்று முதல் அவன் கஞ்சிக்கே கஷ்டப்பட்டானென்ற கதையை தொடர மனசு வரவில்லை. சரி விடுங்க, நமக்கெதுக்கு அது!

3 comments:

  1. என்ன பாஸு சொல்ல வரீங்க என் அறிவுக்கு எட்டலை !!

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா! வெற்றி வெற்றி! ஓல்டுமாங்கன்னே அது எனக்கே புரியல. அதுனால தான் அது நிஜக்கதை.

    அதாவது அவனுக்கு அந்த ஊர விட்டா வேற கதியே இல்ல. எதுக்காக வேலை செஞ்சானோ அதுக்காக இனிமேல் அவன் வேலை செய்யப்போறதில்லை. காசு கொடுத்து யாரும் அவனை வேலை செய்யச் சொல்வதில்லை. வயிற்றுக்கு சோறு மட்டுமே கொடுத்து பழக்கப்பட்ட ஊர். இதுதான் நிஜ கிராம மனிதனின் வாழ்க்கை. அவன் ஒரு வெகுளி!

    உஷ் அப்பா தப்பு பண்ணிட்டனோ!:)

    ReplyDelete
  3. தாய்மனம்25 November 2011 at 09:40

    ஊருக்கு ஒன்று ~ உறவுக்கு ஒன்று ~ என்று இப்படி பிள்ளைகளை நாம் சந்திக்கிறோம் ## அப்ப வெல்லாம் ஏன் இவங்களை பெத்த ஆத்தா அப்பன் கல்யாணம் செய்து வைக்கலை என்று கோவம்கூட வரும் # வாக்கப்பட்டுவார பொண்ணை காப்பாத்தும் பக்குவம் திறமை இந்தமாதிரி புள்ளைகளுக்கு இல்லையே என்ற வருத்தம்..

    ReplyDelete