Friday 18 November 2011

சிவன் சொத்து குலநாசம்!

கடந்த கலைஞர் ஆட்சியில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அரசின் வருவாயை சீர்படுத்தும் முறைகளை கையாளாமல் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டுமென்ற ஒரே நல்லெண்ணத்தில்(?) கஜானாவை காலி செய்துவிட்டு சென்று விட்டார்கள்.

திட்டங்கள் அறிவிக்கும் முன்பு அது நிதித்துறையின் ஒப்புதலுக்கு செல்வது உலக நடப்பு. அப்படியென்றால், இப்போது கணக்கில் காட்டப்படும் கடன்களை எல்லாம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத்தான் இத்தனை டிபார்ட்மெண்ட்கள், ஆபிசர்களா?

ஊழல் என்பது தனி ஒரு தலைவனோ, மனிதனோ இல்லை ஒரு இயக்கமோ, பொதுச்சொத்தை தின்பதுதான். சரி, அப்படி என்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவர்களை என்னவென்பது???????

அசாருதீனும், மொத்தடீமும் கிரிக்கெட்டில் ஊழல் செய்ததென்றால், சச்சின் என்ன விரல் சூப்பிக்கொண்டிருந்தாரா? இல்லை, சச்சின் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கி இருந்தாரா? இல்லை, சச்சினுக்கு தெரியாமல் எல்லாம் நடந்ததென்கின்றனரா? இதே நிலைப்பாடு தான் அரசு எந்திரத்திற்கும், ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் மற்றும் அனைத்து பொதுவாழ்க்கை பெருந்தலைகளுக்கும்!!!!! 


கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டிலேயே இதுபோன்ற ”லூஸ்லவிடு” டைப் ஆட்டிட்யூடில் எதையுமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு(ஓட்டு வாங்க) ஓடும்போது ஜெயலலிதாவிற்கு இந்த மக்கள் கண் தெரியவில்லையா?

கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்ததென்று, நடந்துகொண்டிருந்ததென்று, ஆட்சியை ஆண்டு பழகிய உங்களுக்கு தெரிந்திருக்கவில்லையா!

இன்று தான் தெரிந்ததோ உங்களுக்கு, கடந்த ஆட்சியில் கஜானா காலியாகிக் கொண்டிருந்ததென்று. தகவலறியும் உரிமைச்சட்டம் (RTI) என்று ஒன்று என்னா *****க்கு இருக்குன்னு தெரியல! எவனாவது டிராபிக் ராமசாமி மாதிரி கோமாளி போடுவார்களென்று நினைத்துக்கொண்டிருந்தார்களா?

இல்ல, ரெண்டுபேருக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருக்கா? எந்தெந்த பிரச்சினைகளை மட்டும் தொடனும், போராட்டம் நடத்தனும், எவற்றில் கண்டுகொள்ளாமல் விட்டு விடவேண்டுமென்று!

இருக்கவனப்பூராம் லூசுப்பயகன்னு நினைச்சுகிட்டிருக்கீங்களா?  6-7 வருசமா கீழ விழுந்துகிட்ருந்த நிறுவனங்களை ஒரே நாளில் தூக்கி நட்டமா நிறுத்தி வைக்கிறத யாரு, முகமது பின் துக்ளக் சொல்லிக்குடுத்தாரா? பல வருசமா நிர்மாணிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்த டில்லியை விட்டு தலைநகரை ஒரே நாளில் மாற்ற நினைத்த அந்த புத்திசாலிக்கும், தங்களைப் போன்ற மாமேதைக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

வெட்டுபட்டமரம் வளரவேண்டுமென்றாலும், ஒவ்வொரு அடியாக, நாட்பட நாட்படத்தான் வளரும். ஒரேநாளில் பெரிய மரமாக வளர்க்க ஒன்று மந்திரவாதி வேண்டும், அதற்கு அடுத்தபடியாக துக்ளக்கின் வாரிசு நீங்கள் தான் வேண்டும்.

இந்த ஒரு சிறு மேனேஜ்மெண்ட் டெக்னிக்கை கூட சொல்லித்தற ஒரு ம.....ண்டியும் ஒங்க பக்கத்துல இல்லன்னா! அதுக்கு காரணம் யாரென்றும் உங்களுக்கு தெரியும்.

ஜெயலலிதா அம்மா! கலைஞர் அய்யா! மற்றும் வருங்கால முதலமைச்சர்களே! நீங்க ஓட்டிட்டு போறது சைக்கிள் இல்ல. மோதுனா நீங்க மட்டும் சாக, அது பஸ், உங்கள நம்பி ஏறிருக்கவய்ங்கள வீட்டுவரைக்கும் கொண்டுசேர்க்க முடியலைன்னா, பஸ்ஸ விட்டு பொடனியச்சேந்து அடிச்சு எறக்கி விட்ருங்க!

அகதியா அலையிறது தமிழனுக்கு ஒன்னும் புதுசில்ல!


பி.கு: ஊர்ச்சொத்தைத்தான் சிவன் சொத்து என சொல்வது வழக்கம்!(தலைப்பு விளக்கம்)

1 comment:

  1. ஊர்ச்சொத்தைத்தான் சிவன் சொத்து என சொல்வது வழக்கம்! ## சிவன் சொத்து குலநாசம்! ## மனசுத்தத்தோடு ஒரு தமிழ் குடிமகனின் ஆதங்கத்தை அளவாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிளாக்கர் # இந்த விழிப்புணர்வு, என்று வோட்டுபோடும் தமிழ்மக்களுக்கு எல்லாம் வரமோ, அன்றுதான் # தமிழ்நாட்டுக்கு விடிவு காலம்

    ReplyDelete