Thursday 3 November 2011

அப்பாடக்கர் - விளக்கவுரை!

Appatakkar ku meaning :P
எவ்வளோ அப்பாடக்கர்ஸ் இருந்தாலும் யாருக்கும் சரியான அர்த்தம் தெரியாது !

கவலைய வி...டுங்க.....

கண்ணீர துடைங்க ....

i will explain...


' அப்பாடக்கர் ' என்றால் என்ன?


இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ்.
மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர்.
வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது.
அப்பாடக்கர் ஸ்கூலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)


( நன்றி : தோழர்.ரோஜாராமன் ! )

கட்டிங்,ஒட்டிங்அன்ட் எடிட்டிங் : உங்கள் ' மனோசெந்தில் ' .
[ யாருப்பா அது விசிலடிக்கிறது.... எனக்கு விசிலடிச்சா பிடிக்காதுன்னு தெரியும்ல ! ]

1 comment:

  1. தாய்மனம்25 November 2011 at 10:02

    விஷயம் அப்படி போகுதா # இனி விபரமான ஆளைப்பத்தி பேசும்பொழுது அவரு ஒரு "அப்பாட்டகர்" என்று இழுத்து விடவேண்டியது தான் # எவனாவது போராதகாலம், அப்படினா என்னானு கேட்டா அவுத்து விட வேண்டியது தான்

    ReplyDelete