Saturday 26 November 2011

சில்லறை வணிகத்தில் FDI

சில்லறை வணிகத்தில் FDI என்ற அறிவிப்பை கேட்டவுடன் யாரும் அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கவேண்டாம். இது ஒரு வகையில் அன்றாடம் பேப்பர் பொருக்கி வயிறு வளர்க்கும் கடைசி குடிமகன் வரை பாதிக்ககூடிய ஒன்று. எனக்கு தெரிந்த சில உண்மைகளை பகிர்கிறேன். ஆதரவு எதிர்ப்பு கருத்துகளை எதிர்பார்த்துதான்!

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் இடைதரகர்களிடமிருந்து விவசாயிகளையும், நெசவாளர்களையும் மற்ற பிற சிறுதொழில் வல்லுநர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு நேரடி கொள்முதல் மூலம் நல்ல விலை கிடைக்கச்செய்ய முடியுமென்ற கருத்தை முன்னிருத்தியே அரசாங்கம் இதை அனுமதித்திருப்பதாக சொல்லி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இதே போல் சில கார்பரேட் நிறுவனங்கள் இந்த சில்லரை வணிகத்தில் கால் பதிக்கத் தொடங்கியபோது அவர்கள் சொன்ன அதே கருத்துதான் மேலே நம்மிடம் அரசாங்கம் சொன்னது. அவ்வாறு இறங்கிய கார்பரேட்களில் முக்கியமானவை, ITC - Choupal Fresh, Reliance - Fresh, More, Safal Market.... etc., இவற்றில் ஒன்றில் வேலை பாலிசி மேக்கிங் லெவலில் வேலை பார்த்த அனுபவத்தில் அவற்றின் படிப்பினைகளைத்தான் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன்.


                     * விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதில் கார்பரேட் யுக்தி என்னவென ஒரு சான்றை இங்கே பார்க்கலாம். தக்காளி கொள்முதல் செய்வதற்காக கிராமங்களுக்கு சென்று வர ஒரு ஆபிசர் இருப்பார். அவர் விவசாயிகளை தெரிந்து வைத்துகொண்டு அவர்களிடம் ஒரு விலையை பேசி அவற்றை ஒருங்கினைத்து வரும் வண்டியில் ஏற்றி, குடவுனுக்கு அனுப்பி விடுவார். அங்கே அதை தரம்பிரித்து கழிவுநீக்கி மிச்சமுள்ள தக்காளிக்கு மட்டுமே பணம் கொடுப்பார்கள். இதை கணக்கிட்டுபார்த்தால், மொத்த சரக்கில் 20% கழிக்கப்பட்டு மிச்சமுள்ள சரக்கில் தரக்கலவையின் அடிப்படையில் ஒரு விலை நிர்ணயித்து அதை கொடுத்தனுப்புவார்கள். இதில் கூட்டி கழித்து பார்த்தால் விவசாயிக்கு நட்டமே! இதனால் தான் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஸ்டோர்கள் மூடப்பட்டன. மற்ற நிருவனங்களும் பின்வாங்கிவிட்டன.

மற்ற பொருட்களென்றால், நாம் பார்த்துகொண்டிருக்கும் பிக்பஜார் போன்ற கடைகளில் உள்ளதுபோல் அவர்களுக்கென்று ஒரு பிராண்ட் வைத்துக்கொண்டு அதில் சட்டை பேண்ட்களை விற்பதுவே வழக்கம். இதற்கான கொள்முதல் எங்கு எப்படி நடைபெறும் என்பதற்கும் மேற்சொன்ன உதாரணமே!

இது ஆலிகோபோலி (Oligopoly) என்ற ஒரு வர்த்தக நிலைமையை உருவாக்கும். ஆலிகோபோலிக்கும், மோனோபோலிக்கும்(monopoly) இடைபட்ட தூரம் அதிகமில்லை. பெரிய கார்பரேட் வழிநடத்திச்செல்லும்.

இது மறுபடியும், அந்நியர்கள் நம்மை சுரண்ட நாமே போட்டுக்கொடுக்கும் எட்டப்ப திட்டம்தான். சிறு, குறு தொழில்முனைவோரும் அதை வாடிக்கையாளர் கைகளில் சேர்க்கும் வரை உள்ள சங்கிலியின் கண்ணிகளை உடைத்துவிட்டு நீண்ட கயிறாக கட்டிவிடுவதற்க்குச் சமம்தான்.

இதற்கு மேல் நீட்டிமுழக்கி எழுதவிரும்பவில்லை. கமெண்டினால், ரிப்ளையில் மற்ற விவரங்கள்!

இதனால் எந்த நன்மையும் இல்லை! எந்த என்றால் எல்லாமும்.
சிறுபுழுவிற்கு ஆசைப்படும் மீன்களே! சிந்திக்கவும்.

8 comments:

  1. நாமளோ, விவசாயியோ நஷ்டமடையிறது இருக்கட்டும். ஒரு அரசாங்கம் ஆதாயம் இல்லாமலா அனுமதி கொடுக்கும் . அது என்ன மாதிரியான ஆதாயம்..? -அரசாங்க ஊழியன்

    ReplyDelete
  2. அரசாங்கத்தின் கணக்கு: அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வந்தால் பணப்புழக்கம் அதிகரித்து அதைச் சார்ந்த மற்ற தொழில்களும்(வேர் ஹவுசிங், லாசிஸ்டிக்ஸ்....) வளரும். புதிய வரவுகளால் சந்தையில் போட்டி அதிகரித்து இந்திய தொழில்முனைவோர்களுக்கு சாதகமாகவும், இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதத்திற்கு உந்துகோலாகவும் இருக்குமென்ற நினைப்பே!

    மற்றபடி, அரசியல்வாதிகளுக்கான ஆதாயங்கள் எப்படியும் கரந்துவிடுவார்கள்.

    பதுக்கப்பட்ட கருப்புப்பணங்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு அரசாங்கம் ஏற்படுத்திய புதிய வாய்க்கால்களில் ஒன்று இது. இன்னும் பல வாய்க்கால்களைத் திறக்கும் இந்த அரசாங்கம். ஏனென்றால் சுவிஸ் நாட்டில் உள்ள பணம் இவர்களுக்கு நெருங்கியவர்களின் பணமே!

    அம்புட்டுதேன்!

    ReplyDelete
  3. @jokinjey அண்ணே! தியரிடிகலா ஒரு மேட்டர எப்படி விளக்கலாம்னு கேட்டா அதுக்கு சரியான எக்ஸாம்பிள் அந்த வெப்சைட் ஆர்டிகிள். வால்மார்ட் பத்தி வாய்கிழிய பேசிருக்கானே, வால்மார்ட்டோட லாப பணம் நம்மூர் எக்கனாமிக்கு யூஸ் ஆவும்தான? அவன் சொன்னதுமாதிரி வால்மார்ட் லச்சத்துல ஒன்னு லச்சத்தி ஒன்னா தான் வருவான். லச்சத்தி ஒன்னா பொழப்பு நடந்தும் எண்ணத்தோடு அல்ல! மற்றவர்களை விட விலை குறைத்து குடுப்பது எதுக்கென்று தெரிந்தும் அதை நியாயப்படுத்துர மாதிரி கொரஞ்ச விலைக்கு கிடைச்சா நல்லதுதானேங்கிறான். பிக்பஜார்ல எல்லாமே சீப்புன்னா நாம அங்க போறோம். அப்புறம் எதுக்கு பிராண்ட் வேல்யூன்னு ஒரு மேட்டரு?
    இதெல்லாம் விட ஒன்னு சொன்னான் பாருங்க, வால்மார்ட்காரன் விலைய ஏத்தவே மாட்டானாம், ஏத்துனா மத்தவய்ங்க மார்க்கெட்ட புடிச்சுகுவாய்ங்களாம். மத்தவய்ங்க அப்போ உயிரோட இருந்தாத்தானே? டொரினோ, நன்னாரி சர்பத், கண்மார்க் கலர், சோடா, அமிர்தமெல்லாம் இப்போ கொக்க்கோலா காரன் விலைய ஏத்துன ஒடனே மார்கெட்ட புடிச்சுகிட்டாய்ங்கள்ள?
    அரபு நாடு மாதிரி, என்னமோ தண்ணியே கிடைக்காதமாதிரி தண்ணி பாட்டில 12ரூபாய்க்கு விக்கிறாய்ங்க, அதுலயும் நாம அக்காபீனா வேணும்னு கேட்டுவாங்கி குடிக்குறோம். ஏன் அது எறக்குமதி பண்ண தண்ணின்னா?
    ஐடிசி கம்பெனி சிகரெட் மட்டும் அம்புட்டு ஒசந்ததா? ஏன் அவன் வெலை ஏத்துனாலும் ஒரு பய அவன் மார்க்கெட்ட புடிக்க முடியல? வெளிநாட்டுகாரய்ங்க ஒருத்தன்கூடவா நல்ல சிகரெட் தயாரிச்சு இந்த விலைக்கு இங்க கொண்டுவந்து விக்கமுடியல?
    நான் முன்னமே சொன்னதுமாதிரி, ரீடெய்லில் பாலிசிமேக்கிங்க் லெவலில் இருந்ததனால் அதன் முழு உருவத்தையும் தோலுரிச்சு பார்த்துட்டுதான் சொல்றேன்! அந்நிய முதலீடு நல்லதல்ல!
    இடைதரகர்கள் ஒழிக்கப்படுவதில்லை. பெரிய நிறுவன்ங்கள் அந்த போஸ்டிங்கை நிரப்பி வைத்துதான் வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றன. மொத்த த்தில் இது ஒரு சூரிய நமஸ்காரத்தை நோக்கிய பயணம் என்பது திண்ணம்!

    ReplyDelete
  4. உயிர்தோழனின் கேள்வி: அப்போ அரசுக்கு வரக்கூடிய வாட் வருவாய்? FDI

    என்பதில்: வாட்! வருவாய்க்கும் பெரு நிறுவன வியாபாரத்திற்கும் பெரிய பங்கு இல்லை. வாட் வரிக்காக கொண்டுவரப்பட்டதல்ல FDI. தொழில்களை சீரமைப்பதாக சொல்லி அந்நியமுதலீட்டை(51%) இழுத்து இங்கிருக்கும் சிறு தொழில் முனைவோரை பெருந்தொழில் செய்யவைத்து, இந்திய பொருளாதாரத்தை பெருக்கும் முயற்சியாம்!

    ReplyDelete
  5. 1991 பிறகு திறந்து விட்ட தாராள பொருளாதார கொள்கையின் தொடர்ச்சி தானே இந்த சில்லறை வணிகத்தில் FDI..
    1994ல் RPG செல்லுலாரின் கட்டணம் நிமிடத்திற்கு Rs 24 மேல, இன்றைய கட்டணம் நாம் அறியாததில்லை, இதற்கு அரசின் கட்டமைப்பு மட்டும் காரணமில்லை என்றாலும் அந்நிய முதலீடு வரவின் காரணமாய் நமக்கு கிடைத்ததோ குறைவான கட்டணம்
    இது போல தரமான பொருள் சந்தையில் கிடைக்க வழி இல்லையா.
    சுட்டி கீழே ..
    http://viruvirupu.com/jayalalitha-slammed-foreign-direct-investment-fdi/tamil-news/11539/

    ReplyDelete
  6. பெரும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்தாலும் சில்லறை வணிகத்தில் அவர்கள் விற்கும் பொருட்களுக்கு நம்மிடம் இருந்து கட்டாயமாக பணம் வாங்கி அரசுக்கு வரி செலுத்துகிறார்களே, நமது வரி இல்லாமல் விற்பனை வரியும் அரசுக்கு கிடைக்குமல்லவே..

    ReplyDelete
  7. அந்நியமுதலீடு என்பதை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் வாதமல்ல இது. அதனால் தான் “சில்லறை” வணிகம் என்ற ஒன்றைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் சொல்வது மிகச் சரி! 1991ல் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைதான் இன்று இந்தியாவின் முன்னேற்றத்திற்கு காரணம். ஆனால், தாராள மயமாக்கள் என்பது அந்நிய முதலீடுகளை அனைத்து துறைகளிலும் அனுமதித்து விடுவதென்பதில்லை. இதையும் வேர்ல்டு ட்ரேட் அக்ரிமெண்ட் என்பதையும் ஒன்றாக கருதவேண்டாம்.

    இப்படி வரைமுறை இல்லாமல் திறந்துவிட்டதால் தான் பைனான்ஸ் மினிஸ்டராக இருந்த சிதம்பரம் இன்று உள்துறை அமைச்சராக இருக்கிறார். சில விஷயங்களில் சட்டம் இயற்றுபவர்களுக்கு உண்மையான தகவல்கள் கிடைப்பதில்லை. ஒருதலைப்பட்சமான தகவல்களே தயாரித்து அளிக்கப்படுகின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணம், பங்களாதேசில் பரவலாகக் காணப்படும் சிறிய டிராக்டர்கள் இந்தியாவிற்குள் கால்பதிக்காமல் சட்டம் விளையாடிக்கொண்டிருப்பது.

    நீங்கள் சொன்னதுபோல், செல்போன் வளர்ச்சியில் கட்டமைப்புக்கு உதவிகோரியது, அதாவது பைனான்ஸ் உதவி கோரியதினால் மட்டுமே இன்று நாம் தன்னிறைவு நிலைக்கு வந்திருக்கிறோம். இதுவே அதை(செயற்கைகோல்களை) தயாரிக்கும் நிறுவனத்தையோ அல்லது வேறு நாட்டு பொருட்களை வாங்கியோ இந்த கட்டமைப்பை உருவாக்கி இருந்தால் இன்று இது சாத்தியமல்ல.

    இதில் வரி என்பது முக்கியமான விஷயம் தான். இந்திய வரி வருமானத்தில் அதிக வருவாய் ஈட்டி தருவது விற்பனை வரியல்ல. சர்வீசஸ் துறையிலிருந்தே அதிக வருமானம் வருகிறது. இந்தமாதிரி வரும் வருமான வரியை மாநிலங்கள் பங்குபோட்டது போக மீதிதான் மத்திய அரசாங்கத்திற்கு செல்லும்.

    நீங்கள் குறிப்பிடும் இன்னொறு பாய்ண்ட், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்குமல்லவா? இதை நான் மேலே குறிப்பிட்டதுபோல, தரம் என்பதற்கும் பிராண்ட் வேல்யூ என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஐடிசி விற்கும் ஜான்பிளேயர் சட்டைகளுக்கும் குமார் சர்ட்ஸ்க்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனாலும் ஜான் பிளேயர்க்கு மதிப்பு அதிகம், மவுசு அதிகம். குமரன் டிஸ்டில்டு வாட்டர் ஒரு லிட்டர் 4ரூபாயென்று குடுத்தாலும், நாம் அக்காபோனாவை மட்டுமே நம்புவோம். இதுதான் நடக்கும்.

    தரமென்று நாம் நினைப்பது மாயை என்று இப்போது புரியப்போவதில்லை பொதுமக்களுக்கு!

    அந்நியமுதலீட்டை கொண்டுவந்தால் இந்தியபொருட்களை கொள்முதல் பண்ணும் பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானமும், இடைத்தரகர்களற்ற சந்தையும் உருவாகுமென்றும். இவ்வாறு கொள்முதல் செய்வதால், நல்ல விலையில் நுகர்வோருக்கு கிடைக்குமென்றும் கனவுகாண்கிறது அரசாங்கம். தற்போது ரீடெய்லில் காலூண்றியிருக்கும் ஏதேனும் ஒரு கார்பரேட் நிறுவனத்திடம் உண்மையான ஸ்டடி ரிப்போர்ட் கேட்டு வாங்கி பார்த்திருந்தால் இது தவறு என்று புரிந்திருக்கும்.......

    விடாது கருப்பு!

    ReplyDelete
  8. நீண்ட தெளிவான விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete