Friday 31 August 2012

காலஞ் செய்த கோலமடி!

           


           தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் ஈமு கோழி வளர்ப்பவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையுடன் வருடத்திய போனசும் வழங்கப்படுமென்ற பத்திரிக்கை விளம்பரங்களை நம்பி பணம் கட்டி சேர்ந்தவர்கள் பலர். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களைக் கைவிட்டது அவர்கள் சேர்ந்த நிறுவனங்கள். இதன் விளைவாக, ஊடகங்களுக்கு ஒரு ஊழல் சென்சேசன் செய்தியும் ஏமாந்த பல பாமர ஜனங்களின் இல்லங்களில் கதறல் ஓலங்களும் கடந்த 2மாத காலத்தில் தமிழகத்தையே உலுக்கியது.

          இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். ஈமு கோழி மருத்துவ குணம் மிக்கது என்றும் அதன் இறைச்சியும், அதிலிருந்து வரும் பை-புராடக்ட்சும் பல்வேறு நோய்களுக்கு மருந்தென்றும் மொத்தத்தில் இது வளர்ப்பது வருங்காலத்தில் லாபகரமானதென்றும் மிகத் துள்ளியமாகக் கணித்த சில அரைவேக்காடுகள் உடனடியாகக் களத்தில் குதித்தன.



அடிப்படைத் திட்டம்: ஈமு கோழி இறைச்சியை மக்களிடம் பிரபலப்படுத்தி விட்டால், பிராய்லர் கோழிக்கு மாற்றாக்கி அதன் மூலம் நாடெங்கும் இதனை மார்க்கெட்டிங் செய்து விடுவது என்பது தான் அவர்களின் ஆரம்ப யுக்தி. நல்லது தான்.

           மேற்கண்டவாறு செயல்படுத்தும் பட்சத்தில் பிராய்லரை விட பல மடங்கு விலையுள்ள ஈமுகோழிகளின் தேவை இன்றைய பிராய்லர் கோழி கறி விற்பனை அளவான, நாளொன்றுக்குப் பல லட்சம் கிலோக்கள் என தேவைப்படும் என்ற தொலைநோக்கு சிந்தனையும் சரியே! இதற்கான முதலீட்டையும் பராமரிப்புச் செலவுகளையும் நைசாகப் பேசி பொறுப்பை பலருக்கு பகிர்ந்து கொடுக்கும் காண்ட்ராக்ட் பார்மிங் தத்துவமும் சரியே!



என்னதான் பிரச்சினை?: முதலில் ஒரு ஓட்டல்(ஈமு கறி ருசியை மக்களுக்கு பழக்கப்படுத்த) ஒரு பண்ணை என்று ஆரம்பித்து அதில் நிறைவுகண்ட பின் படிப்படியாக அதை எல்லா ஊர்களுக்கும் விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். இதுதான் காலங்காலமாக விரிவாக்கம்(Extension) என்பதன் அடிப்படைத் தத்துவம். ஆய்வுக்கூடங்களில் பெற்ற வெற்றியை படிப்படியாக பீல்டுக்கு கொண்டு செல்வதும், அவற்றை கடைநிலை பண்ணை ஊழியனுக்கு கற்றுக் குடுப்பதும் இதனுள் அடங்கும். 

         இந்த அடிப்படைத் தத்துவத்தை மறந்து ஒரே பாட்டில் பெரியாளாக வேண்டுமென்ற நினைப்பில் எல்லோருக்கும் ஆசைகாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு திட்டத்தில் 100பேரைச் சேர்க்கிறோமென்றால் அதில் அனைவருமே முழுமையாக அதைப் புரிந்துகொண்டு சேர்ந்திருப்பதாக நினைத்தால் அது மூடத்தனம். 80-20 விதிப்படி, எந்த ஒரு குரூப்பிலும் 80சதவீதத்தினர் நம்பிக்கையுடனும் 20சதவீதத்தினர் அரைமனதுடனும் தான் இணைந்திருப்பார்கள். அந்த 20சதவீதத்தினரால் எந்நேரமும் பிரச்சினை வரக்கூடும். அதானால் கிரிசிஸ் மேனேஜ்மெண்ட் (Crisis Management) செய்வதற்குத் தேவையானவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


           அந்தப்பக்கம், மார்க்கெட்டிங்க் என்பது குதிரைக் கொம்பு. அதுவும் பிராய்லர் கறி ருசிகண்ட பூனைகளுக்கு திடீரென்று ஈமு கறியை காட்டி பழகச் சொல்வதென்பது மாயாண்டிக்கு பொன்னாத்தாவை விலக்கிவைத்து விட்டு ஐஸ்வர்யா ராயை கட்டிவைப்பது போன்றது. ஐஸ்வர்யா ராயுக்கு களை வெட்டவோ, கஞ்சிக் கழையம் சுமக்கவோ தெரியாது. அதனால், உலகத்திலேய் மிகச் சிறந்ததை குடுக்கிறோமென்றாலும் அது யாருக்கு, என்ன தேவையுடையவனுக்கு குடுக்கப் படுகிறதென்பதை முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும். 

            இப்படி எல்லாவற்றிலுமே அவசரப்பட்டு அகலக்கால் வைத்துவிட்டு அதனால் பல குடும்பங்களின் பாவத்தையும் கொட்டிக் கொண்டதே இந்த நவீன யுக வாழவைக்கும் தெய்வங்களின் தனித்தன்மை!

             இன்னும் நிறைய இருக்கிறது. வேண்டுவோர் கமெண்டில் கேட்டுத் தெரிந்து கொள்க!

             இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமே, இது போன்ற எந்தத் திட்டத்தையும் மேற்கண்ட எல்லா விவரங்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பின் அவர்களிடன் முடிவெடுங்களெனக் கேட்டுக் கொள்வதே! 

            மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தில் ஈமு கோழிக்குப் பதில், நாட்டுக் கோழி, மருந்து வெள்ளரி, ஜட்ரோபா, அகர் மரம், மூலிகைச் செடிகள் வளர்ப்பு.... போன்ற அனைத்து வந்த வரப்போகும் திட்டங்களுக்கும் பொருத்திப் பார்த்துத் தெரிந்து கொள்க.

3 comments:

  1. துரை..பிரமாதமா பொருளாதார வகுப்பு எடுக்குறாரு..வாத்தியாரா போகவேண்டியவரு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தாய்மனம்1 September 2012 at 02:52

    அண்ணே அதெல்லாம் போவட்டும், இந்த ஈமோ கோழி கறி ருசியா இருக்குமா!!! எந்த விலைக்கு விற்றால் இந்த கோழி வியாபாரம் நியாயமான லாபம் கிடைக்கும் வியாபாரமாகும்

    தொடர்ந்து எழுதுங்க

    இது தாய்மனம் வேண்டுகோள்

    ReplyDelete
  3. ப்ளாக்கின் தலைப்பு ஏன் இவ்வாறு? please change..! consider my request!

    ReplyDelete