Thursday 14 March 2013

மாட்டுக்கார வேலா ஓன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா!


நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் ……………….
………….
கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு…..


எப்பவோ, பாரதியாருன்னு ஒரு பெருசு பாரத ஜனங்களோட இன்னைக்கி நெலமய நொண்டிச்சிந்துல பாடிவச்சிட்டு போச்சாம். ஆளு கிளிசோசியம் பாத்து பொழச்சிருக்கும்போல. அப்டியே அச்சு அசலா நம்மூர்ல இன்னைக்கு நடக்குறத சொன்னமாதிரியே சொல்லிருக்குடா.


அதுசரிடா மண்டையா? ஊருக்குள்ள என்ன பிரச்சினையாம்? – ஒன்னாப்பு படிக்கிற பயக மட்டமத்தியான வெயில்ல டவுசரோட கஞ்சிதண்ணியில்லாம கோசம்போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்காய்ங்கண்ணே, பள்ளிக்கோடத்துக்குள்ள போகாம.

எதுக்காம்?

ஏதோ எலங்கபட்டி பிரச்சினையாம்.

அதுக்கு இவய்ங்களுக்கு என்னவாம்?

அதான்ணே எனக்கும் தெரியல?

பள்ளியோடத்துகுள்ள போலன்னா எலங்கபட்டில 
மழைபேஞ்சுருமா?

எவனாச்சும் மைய தடவி ஒக்கார வச்சிருப்பானோண்ணே?

சரி என்னதான் வேணுமாம் அவய்ங்களுக்கு?

அந்த ஊருல எல்லா ஜனங்களும் ஒன்னாமின்னா சந்தோசமா இருக்கணும்னுதானாம்ணே!

நல்லவிசயந்தான? அதுல என்ன தப்பிருக்கு? இப்ப என்னாவாம்?

அந்தூரு தெக்குத்தெருவுகாரய்ங்க வடக்குதெருவுகாரய்ங்கள அடிச்சு வெரட்றாய்ங்களாம்ணே. பொம்பளபிள்ள பிஞ்சு பொடுசுன்னுகூட பாக்காம சகட்டுமேனிக்க அடிச்சு வெரட்டி கொன்றுக்காய்ங்கண்ணே!

சரி! அதுக்குன்னு நம்மூர்ல பள்ளியோடத்து போகாம இருந்தா என்ன கெடைக்கப்போகுதாம்? அந்தூரு தெக்குத்தெருவுகார ஆளு எதுவும் வாத்தியாரா இருக்கா?

பள்ளியோடத்தபத்தி எனக்கென்னணே தெரியும்?! ஆனா இத நான் கேட்டதுக்கு ஒரு அர டிக்கட்டு, “உங்க ஊரு தெருக்கொழாயில குடிதண்ணி வரலன்னா எதுக்கு மெயின் ரோட்டுக்கு போயி பஸ்ஸ மறிக்கிறீங்க? பஸ்லயா தண்ணி வருது? அது எதுக்குன்னு சொல்லு இதச்சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டான்ணே”. இனிமேல் இவய்ங்ககிட்ட வாய குடுக்கக்கூடாதுண்ணு அப்பவே எனக்கு ஒறச்சுருச்சுண்ணே!

எல்லாஞ்சரிதான்டா! ஆனா, இப்டி கொடிபுடுச்சுக்கிட்டே இருந்தா எல்லாஞ் சரியாகிடுமா?

ம்க்கும்! இதத்தேன் வண்டிக்கார தானாபானா கேட்டாராம்.  எல்லாப்பெயலும் சிலேட்டுகுச்சிய தூக்கி எறிஞ்சு வெரட்டிருக்காய்ங்க.

ஆமா! அதுவுஞ்சரி தான! அந்தாளுக்கு என்ன தெரியப்போகுது கஞ்சிதண்ணியில்லாம கத்தி கோசம்போடுறதப்பத்தி. முன்னப்பின்ன குடிச்சிருந்தாத்தான டாஸ்மார்க் பார்ல மொச்சப்பயறு வெல தெரியும்?

சரி! ஒரு ஊர்ல ஒன்னாப்புகாரய்ங்க பள்ளியோடம் போகலன்னு எல்லா ஊர்லயும் ஒன்னாப்பு ஒதுங்கியிருப்பு ஆகிடுச்சு. அப்புறம்?

அப்புறமென்ன, எல்லாரும் பக்கத்து ஊரு கம்மா கரயில ஒன்னுகூடி கோசம் போட போறாய்ங்களாம்.

ஓ! கொள்ளப்பெயலுக கூடப்போறாய்ங்கன்னு சொல்லு? அப்புறம்?

அப்புறமென்ன, அப்டியே கொஞ்சங்கொஞ்சமா, கா பரிச்ச வந்துருச்சு, வாத்தியார் சொன்னாரு அங்க போகாத, ஆயா சொன்னா இங்க போகாதன்னு கழண்டுக்கிருவாய்ங்கண்ணே.

ஆனா, அப்டி தெரியலயேடா? எனக்கென்ன தோணுதுனா, எல்லாவீட்லயும் பள்ளியோடம் போற ஜாதி இருக்குடா! அவய்ங்கள பெத்தவங்களும் ஒணந்து அவங்கவங்க வேலைவெட்டிக்கு போற பண்ணைகள்ல இதே மாதிரி கோசம் போடுவாய்ங்களோ? அப்டி இல்லன்னா, இந்த பயலுக போயி இவய்ங்களமாதிரியே ஒத்துவாழ்ற ஜாதியான வயக்காட்டுவேலைக்காரய்ங்க, கெணறுவெட்றவய்ங்க, கெடையமத்துறவய்ங்க, இப்டி எல்லா கூட்டத்தோடயும் கலந்து பேசி ஒன்னுசேத்ருவாய்ங்களோ? அப்டியே அந்தச்சொந்தம் இந்தச்சொந்தம்னு ஒன்னு சேர்த்தா, மொத்த ஊரே தெரண்ட மாதிரி தான? ஊரே தெரண்டுருச்சுன்னா, நம்ம பண்ணையார்னால மிசுங்கமுடியாதுல? அப்டி வர்றாய்ங்களோ?

அது இருக்கட்டும்ணே, இது என்ன உள்ளூர் வெவகாரமா, பண்ணையாரவச்சு நம்ம பஞ்சாயத்துல பேசி தீக்குறதுக்கு? பிரச்சன 18 பட்டி பஞ்சாயத்துக்கு போயிருச்சாம்லணே?

அடே! மண்டையா, 18அங்க, பட்டியில பெரிய பட்டிக்காரன் என்னமோ கணக்குப்போட்டு, எதாவது ஒன்ன சொல்லிக்கிட்ருப்பான். நாம அதெல்லாம் நம்பக்கூடாது. நம்ம பண்ணையார வச்சு அவங்க ஊர சாம, பேத, தான, தண்ட உபாயங்கள ஏவிவிட்டு வழிக்கு கொண்டுவந்துரணும்டா! அதுக்குத்தாண்டா இம்புட்டும்.

நம்ம பண்ணைக்கு அம்புட்டு எசக்கு இருக்காணே?

என்னடா இப்டி கேட்டுப்புட்ட? இந்தா இருக்க 500 தலக்கட்டுள்ள ஒத்தக்காவித்தி பெயலுக ஊர ஒழுங்குபடுத்த தெறமில்லன்னா பெறகெதுக்கு 5000 தலக்கட்டு ஊரு? அதுக்கொரு பண்ணையாரு?

ஏன்ணே? இதெல்லாம் தப்பில்லையா? அவங்க ஊர்ல போயி நம்ம???? 

ஏன்டா, பங்களாபட்டியில ஊர் புகுந்து பொண்ணத்தூக்குனது யாருன்னு மறந்துட்டியா? நம்ம பண்ணையோட சிய்யாந்தாண்டா? அன்னைக்கி அது தப்பா தெரிஞ்சிருந்துருக்கலாம். ஆனா, அத தப்புன்னு இன்னைக்கு எவனாச்சும் சொல்வானா? ஆப்புகானாபட்டியில பெரியபட்டி மிராசு ஒரண்டையிழுத்தப்ப வண்டிமாடு ஆளு அம்போட போனது யாரு? நம்ம பெயக தான? நம்ம பண்ணை சொல்லித்தான?

அப்ப என்னண்ணே செய்யச்சொல்றீங்க?

“எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவமென்ப திழுக்கு”

அப்டீன்னு நம்ம பண்ணையோட பாட்டன் சொல்லிருக்கான்டா. 
புரிஞ்சா பொழச்சுக்க. இல்லாட்டி போயி பொழப்பப்பார்றா!


எருமை கன்டுக்குட்டியுடன்,
மாட்டுக்கார வேலன்.

2 comments:

  1. மாப்ளே. சரியாத்தான் பேசிருக்கீரு... கால வாய்க்கால்ல வைச்சா என்னா..... வரப்புல வைச்சா என்னா .. சவதியாடுச்சின்னா மேல ஏற வேண்டியதானே..!

    ReplyDelete
  2. https://twitter.com/88justnbieber

    ReplyDelete