Tuesday 24 April 2012

காவியப் பெண்கள்!


 அட! அதுக்குள்ள கற்பனை குருதய தட்டிவிட்டு கண்ணகிக்கும் காத்தவராயனோட அம்மாவுக்கும் பறந்துடுறீங்க!

எங்க காலத்துல, ஏதுயா, புஸ்தகம், படிப்பு, பஜனை, கதாகாலட்சேபமெல்லாம்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம், சினிமா, அப்புறம் டிவி, டிவியில என்னன்னு கேக்குறீங்களா? அதுவும் சினிமாதேன். இப்படி எங்கும் சினிமா, எதிலும் சினிமான்னு நீக்கமற நிறைந்த ஒன்று தான் எங்கள் வாழ்வை நெறிப்படுத்த இறைவன் தந்த தற்கால நீதி நூல்!

சரி! ஆட்டைய ஆரம்பிப்போம். மொத சினிமாவுல வந்த பெண்களையும், பெண்களென்றால் என்ன என்று அது கற்றுக்கொடுத்த பாடத்தையும் பாப்போம்.

கடலோரக்கவிதைகள்ன்ற படத்துல, பாரதிராஜாங்கிற டைரக்கட்டர் என்னென்னமோ சொல்லிருக்காராம். எனக்கு ஒன்னும் வெளங்கல! ஆனா, என்னையும் அசர வச்ச ஒரே ஒரு ஆளு அதுல வாற ரெண்டாவது ஹீரோயினிதேன். ஒரு கட்டுமரத்துகிட்ட ஹீரோ சண்டை போட்டுக்கிட்ருக்கையில, ஓடியாந்து, ”மாமா! அவய்ங்க தப்பா பேசுனது ஜெனிபர் டீச்சர இல்ல, என்னியத்தான்னு” சொல்லி முடிக்கும் போது, பெண் என்ற வார்த்தையின் உயரம் என்னான்னு புரிஞ்சுக்க முடியுது. அதுக்குமேல அந்த படத்துல நடிச்ச யாரா இருந்தாலும் என் கண்ணுக்கு தெரியல. அதுல அவய்ங்க சொன்ன எந்த மேட்டரும் எனக்கு நெனவுல இல்ல.


அப்புறம், இப்ப ஒரு படம் வந்துச்சே! அதான், “தென்மேற்குப் பருவக்காற்று”ன்னு ஒரு படம். அதுலயும், செகண்டு ஹீரோயினி, “மாமா, எனக்கு எங்கப்பன் சேத்துவச்சதெல்லாம் கொண்டுவந்து தர்றேன். பத்தலன்னா, கடன் வாங்கிக்க! நான் நல்லா கூலிவேலை செய்வேன். கடனைக் கட்டிக்கலாம்”னு சொல்லி வாய்மூடல, என்கண்ணுல பொலபொலன்னு தண்ணி! நீ வேலைக்குப்போனா நானும் வேலைக்குப் போவேன், எனக்கும் எக்கனாமிகல் ப்ரீடம் வேணும்லங்கிற கேட்டகிரி இல்ல அது! ஒரு நாள் கல்யாணச் செலவுக்காக ஒரு ஆயுசு முழுக்க வேகாத வெயில்ல வெந்து வெண்ணச்சட்டியா சாகுறது அது! அந்த சீன, உத்துப்பாத்தாத் தெரியும், அவள் எம்புட்டுப் பெரிய பேரழகி, பெருந்தன்மையாழினி, எதற்கும் ஈடில்லாத ஒரு உயிர்(அரை மணி நேரமா இந்த எடத்துல என்ன வார்த்தை போடுறதுன்ன் தடுமாறி, கடுப்பாகி, இதப் போட்டு வச்சிருக்கேன். கண்டிப்பா, இது சரியான வார்த்தை இல்ல!) என்று புரியும்.

அதாகப்பட்டது; எனக்குத் தெரிந்த பெண் என்பதற்கான வரையறை அல்லது எடுத்துக்காட்டுகள் இப்படித்தான் அமைந்தன. பாக்யராஜ் படத்துல வர்ற ஓப்பன் டைப் ஹீரோயின்களோ, அல்லது ரஜினி டயலாக்ல வர்ற அடக்க, ஒடுக்க...... டைப்போ கிடையாது.

தொடரும்......

1 comment:

  1. தாய்மனம்4 May 2012 at 11:32

    உங்க ரசனையும் என்னோட ரசனையும் என்றுமே ஒத்துபோகும் என்று நான் அன்றே உணர்ந்தேன்

    என் கணக்கு சரியே என்பதை நீங்க மீண்டும் மீண்டும் எழுத்தில் காட்டுரிங்க.

    பெண்களை புரிந்து கொள்ளும் எந்த ஆண்மகனும் இப்படிதான் பார்க்கிறான்

    தவறாக ஜோடி சேர்ந்த ஆண்கள் இதை படிக்கும் வேலை தாம் இழந்தது எது என்றும் உணர்வார்கள்

    தொடருங்க

    ReplyDelete