Tuesday 17 April 2012

வாழ நினைத்தால்.....


முன்னிருக்கையில் நீ, பின்னிருக்கையில் நான்!
உன்னருகில் கோவலன், என்னருகில் கும்பகர்ணன்!
அலைபாயும் கூந்தலில் அருவிக்கொத்தாய் முல்லைச் சரம்!
அறக்கப்பறக்க ஓடி வந்ததில் கலங்கிய குளமாய் என்முகம்!
அசைந்தது உன் சிரம், குலுங்கியதென்னவோ வாகனம்!
அழுத்தியழுத்தி அவனும் கேட்டுப்பார்த்தான், படியவில்லை நீ!
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறேன், கும்பகர்ணன் கொடுத்த இடைவெளியில் இவையெல்லாம்,

கூந்தலே பர்தாவாம், குறுக்கே ஆட்டும் தலையே விளக்கமாம்!
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டான் அக்கயவன், அவசரமாய் வந்தமர்ந்தேன் உன்மடியில் பின், சரிந்து உன்னருகில்!
சினுங்கிச் சிதறினாய்! கோர்த்தனைத்தேன் மன்னிப்புக்கோரிக்கைகளால்!
போவதெங்கே அவசரமாய்!? ஆவலுடன் கேட்டது நீ! நிலைகுழைந்து சொருகிய கண்களைக் குவித்துச் சொன்னேன், பக்கத்தில் தான்!
எனக்கொரு டிக்கெட் அந்தப்பக்கம் சொன்னது நீ! சொல்லியவாய் மூடவில்லை, பாராசூட்டில்லாமல் குதித்தது நான்!

பின்னங்கால்கள் பிடறியில் பட பிடித்தேன் ஓட்டம் கீழிறங்கி!
முக்கால் மணி நேரம், மூன்று மைல் தூரம், மூன்று வீதிகள் அதிகமாகவே ஓடியிருக்கிறேன் முழித்துப்பார்த்தபோது!

அடுக்களைக்குள் அவள்! அலட்சியப்படுத்தாமல், அடுத்த அறைக்குள் நுழைந்த என்னை அழைத்தாள் நக்கலாக!

இன்னிக்கு பர்ஸ மறந்துட்டுப் போனீங்களே? பஸ் பாஸ், பைக்குள் இருந்ததா? உயிர் போனாலும் கடன் வாங்கேன் என்பீரே! ஆறு மணிக்குள் திரும்பாவிட்டால் மாலைக்கண் மானம் தூற்றுமென்பதறியீரோ?
சிட்டுக்குருவி லேகியமென்று இத்தனை நாளாய் குழந்தையின் சப்பட் லோசனை தின்றிருக்கீரே! என்ன செய்ய உம்மை?
........
தலைக்குள் ராட்டினமும், கண்களுக்குள் கருமேகமும், ஒருசேர வந்து திரள, சத்தமின்றிச் சாய்ந்தது சோபாவில், ஒண்டிப்புலி!

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தலைக்குள் ராட்டினமும், கண்களுக்குள் கருமேகமும், ஒருசேர வந்து திரள, சத்தமின்றிச் சாய்ந்தது சோபாவில், ஒண்டிப்புலி!

    இது மட்டும் புரிஞ்சது.. ஒருவேளை ஒண்டிபுலியாய் நானும் இருப்பதால்..!!

    ஆனாலும் மாப்பு..பர்ஸ இல்லாம பிகர கரக்கிட்டு பண்ண உன்கிட்டதான் பசங்க ட்யுசன் எடுத்துக்கிடனும் போல..!!

    ReplyDelete