Saturday, 24 September 2011

முதல் மழை

மண்ணுக்கு மகிழ்ச்சிதான் முதல் மழையால்,
எனக்கும் அதே நிலைதான் உள்ளுக்குள்!

மழையின் குதூகலமா மண்ணின் குதூகலமா
மண்வாசனை!

பெய்யெனப் பெய்துவிட்டாய் மழையே!
பொய்யொன்றும் சிக்கவில்லை எனக்கே!
நான் எழுதாமல் நீ இழப்பது ஒன்றுமில்லை!
எழுதினாலும் நீ மதிப்பதில்லை என்னை!

1 comment:

  1. தாய்மனம்8 December 2011 at 08:43

    உங்களுக்குள் இருக்கு மண்வாசனை

    அந்த வாசனை வீசுது கவிதையில்

    உங்களிடம் இருந்து கவிதைகள்

    நேரம் கனிந்தால் இன்னும் கிடைக்கும் ~ நம்பிக்கை

    ---

    அதுக்கு காத்திருக்கும் சங்கத்து ஆளு

    ReplyDelete