Saturday, 7 April 2012

10 கமாண்ட்மெண்ட்ஸ்!




1) நாங்கள் இருவரும் குடும்ப வாழ்க்கை என்ற வகுப்பில் இன்று முதல் பதிவு செய்து கொண்டு எங்களது ஆராய்ச்சியை துவங்குகிறோம். 

2) எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியையோ ஆராய்ச்சி விலங்கையோ கைவிட மாட்டோமென்று உறுதியளிக்கிறோம்.

3) எங்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும் அவற்றின் அளவுகளையும் மிகச்சரியாக குறித்துக்கொண்டு அதற்கான தகுந்த மருந்துகளை செலுத்திக்கொள்வோம் என உறுதி கூறுகிறோம்.

4) எங்கள் இருவரின் செல்போன்களின் உரையாடல்களை இன்றுமுதல் பதிந்து கொள்ள அரசிற்கோ மற்ற நிறுவனங்களுக்கோ உரிமை அளிக்கிறோம்(செல்போன் மூலம் செல்லுமிட விவரங்கள் உட்பட).

5) எங்களுக்குளான விவகாரங்கள் எப்போதாவது நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே வருமாயின், எங்கள் இருவரின் பெற்றோரையும் கீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு உறவினர்களையும், இரண்டு நண்பர்களையும் இருவர் தரப்பிலிருந்தும் விசாரணைக்கு உட்படுத்தவோ, தண்டிக்கவோ மற்றும் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளவோ அவர்களின் ஒப்புதலோடு நான் இங்கு முன்னிருத்துகிறேன்.


6) நாங்கள் இருவரும் இனி வேறெந்த தலைப்பிலும் வாழ்க்கை ஆராய்ச்சியை மாற்றிக்கொள்ளவோ, சிந்திக்கவோ, ஒப்புக்கொள்ளவோ நேர்ந்தால் எங்களது பேரன் பேத்திகளுக்கு கல்யாணம் முடிந்தபின்பே அதை ஒப்புக்கொள்வோமெனவும் மீறினால் எங்களை செவ்வாய் கிரக புதுக்குடியமர்த்தலில் உபயோகித்துக்கொள்ளலாமென்றும் உறுதி கூறுகிறோம்.

7) பணத்தையோ, வசதியையோ, ஆடம்பர வாழ்க்கையையோ நாங்கள் விரும்பினால் அதற்கான முன்னோடியை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு அவைகளை பெற்றுக்கொள்வோமெனவும் உறுதியளிக்கிறோம்.

8) குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் யோசித்து கொண்டிராமல், வங்கிகளில் சம்ர்ப்பிப்பது போல், முன்னரே ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயாரித்துக்கொடுத்துவிட்டு அதற்கான ஈட்டுப்பத்திரங்களையும் காட்டி ஒப்புதல் பெற்றே குழந்தை பெற்றுக்கொள்வோம்.

9) அன்னியப் பெண்களையோ ஆண்களையோ எங்கள் குடும்ப உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விடாமல் எங்கள் இறையாண்மையைக் காக்க பாடுபடுவோம்.

10) நாங்கள் இருவரும் மனமொத்து பிரியும் தருணத்தில் இருவரும் சேர்ந்து தாஜ்மகாலின் அளவு, அழகு மற்றும் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை நாங்களே இணைந்து எங்கள் கைகளால் கட்டிக்கொடுத்த பின்பே பிரிந்து செல்வோம். 


பி.கு: இவற்றில் செய்யவேண்டிய மாற்றங்களையோ, சேர்க்கப்பட வேண்டியவைகளையோ அனைவரும் சிரத்தையெடுத்துச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்!


6 comments:

  1. செம கலக்கல்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. ஙே! கங்க்ராசுலேசன். . . :P

    ReplyDelete
  3. யோவ் அண்ணா மருவாதையா எழுத்து தெரியிறது மாதிரி பதிவ போடு

    ReplyDelete
  4. மாப்பு கம்மான்ட்மென்ட்ஸ்கே கம்மென்ட் போடவா..!
    வாழ்க்கையே ஒரு வெறி தான்..
    ஆனா இது கொலைவெறி முயற்சி..!

    ஒருவருக்கொருவர் அடிமையாய் இருக்க அடிமை சாசனத்தில் கை நாட்டு வைச்சிக்க வேண்டியது தானே..!!

    பேக் கிரவுண்டு கலரு ஏன் மாடு வெறிக்கிற மாதிரி போட்டுருக்கே....!!

    ReplyDelete
  5. மிக நல்ல யோசனை - கண்டிப்பாக செயல் படுத்தவும். உங்களுக்கு உங்கள் மனமொத்த துணை கிடைக்க வாழ்த்துக்கள். இது தான் ஹைலைட் "குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் யோசித்து கொண்டிராமல்.... " நல்ல பதிவு

    ReplyDelete