Labels

Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

Thursday, 1 August 2013

இருட்டறைக்குள் முரட்டுக்குத்து

வெள்ளை நிற டெம்போ டிராவலர் வண்டி ஹைதராபாத்தை விட்டு நாகார்ஜூன சாகரை நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்ததது. கண்ணாடி ஜன்னல்களெல்லாம் திரையிட்டு மூடப்பட்டிருந்ததால் உள்ளே நடப்பது வெளியே தெரியாது.

ரோட்டோரமாக வண்டியை நிறுத்தி உள்ளிருந்து காவல்துறை சீருடையணிந்த இருவர் இறங்கியதும் அசீத் கேட்டான்,
“டேய் விசை! இதுக்குப்பேரு தான் இருட்டறைக்குள் முரட்டுக் குத்தாடா”

இங்கு தொடங்குகிறது நம் கதை!

”ஏண்டா! இன்னுமாடா நீங்க திருந்தல?” கேட்டது பெருந்தொப்பை ஏட்டைய்யா.

”அப்டி என்னதான் சார் தப்பு பண்ணாய்ங்க?” டிபார்ட்மெண்டின் புதுவரவு ஏட்டைய்யா.

மொளகா வத்தல் கடைக்கார செட்டியாரு வரும் போது இந்த அசீத் குமார் பெய தும்மிருக்கான். அவரு வீட்டுக்குப்போனதும் நாண்டுக்கு தொங்கிட்டாரு.

ஐய்யய்யோ! அந்த அளவுக்கு போயிருச்சா ஏட்டைய்யா? சரி கூட இருக்கவன் என்ன செஞ்சான்?

அவந்தான்யா பதில் தும்மல் தும்மிருக்கான்.

ஓ! அப்ப கன்பார்ம் தும்மல் விசையோடதுன்னு சொல்லுங்க.

அட! ஆமாய்யா! நம்ம இன்ஸ்பெக்ட்ரு சார் பத்தி தெரியும்ல? அவரு அணைக்கட்டுக்கு கூட்டி போனவன் எவனும் உசுரோடவோ பொணமாவோ கூட திரும்பினதில்ல.

அதான் ஒனக்கு அடிச்சு பிராக்டிசு ஆகட்டுமேன்னு வழிநெடுக அடிக்கவிட்டு கூட்டியாந்தேன்.

இதற்கிடையே இருள்சூழ் வண்டிக்குள்….

அசீத்து, ஏண்டா நேரங்காலந்தெரியாம! இங்க வர்றதுக்குப் போயி இம்புட்டு பவுடர அப்பிருக்க?

விசையண்ணே! நீங்க மட்டும் என்னவாம்? எதுக்கு பச்சை சட்டை செகப்பு பேண்ட் போட்டு வந்திருக்கீங்க?

எப்டியோ என்கவுண்டர் பண்ணதுக்கப்புறம் பொணத்தோட மூஞ்சிய குளோசப்ல டிவில காட்டும் போது ஒரு பொண்ணுக்காச்சும் புடிக்கும்ல. செத்தும் கரெக்ட் பண்ணிய காவியக் கட்டழகன்னு இச்டீடீ பேசவேணாமா? அதுக்குத்தான்.

கரெக்ட் கரெக்ட்! 

சரி, நீ எதுக்கு இந்த பேண்ட் சட்டை போட்டு வந்தன்னு சொல்லு?

பச்சை சட்டை போட்டவன பக்கத்துல வச்ச சுடுறதுக்கும் மத்தவய்ங்கள ஓடவிட்டு சுடுறதுக்கும் பழகுனவறாம் இந்த இன்ஸ்பெக்டரு. ஒரு புக்ல படிச்சிருக்கேன்.

அடத்துரோகி!

டேய்! என்னடா அங்க சத்தம்? இன்ஸ்பெக்டரய்யா வரச்சொல்றாரு. எறங்கி வாங்கடா!

சரக் சரக்…..

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…..

ஊ ஊஊஊ ஊஊஊ….

தம்பிங்களா! ஒங்க ரெண்டுபேத்தையும் ஏன் நான் இங்க கொண்டுவந்தேன் தெரியுமா?

என்னையும் விசையையும் என்கவுண்டர் பண்ணத்தானங்யா? பண்ணுங்கய்யா பண்ணுங்க? ஆனா, கடைசியா ஒருதடவ காயத்ரி மந்த்ரம் சொல்லி கங்காஸ்நானம் பண்ணிக்கிட அனுமதி கொடுங்கய்யா. போற எடத்துக்கு புண்ணியமா....

மன்னிச்சிருங்க தம்பிகளா. ஒங்கள கூட்டிவந்தது என்கவுண்டருக்காக இல்ல. நீங்க பண்ண சமுதாயச்சீர்கேட்டால ஒரு உயிர் போயிருச்சு. அதுவும் மொளகா வத்தக்கடை ஓனரு. ஊருக்குள்ள பெரியமனுசன். அதனால, 
மொளகாக்கடை செட்டியார்கள் சங்கத்துல இருந்து எங்களுக்கு ரொம்ப பிரசரு. வேற வழியில்லாம ஒங்க ரெண்டுபேத்தையும் அரெஸ்ட் பண்ணிட்டோம். எங்களுக்கு இதத்தவிற வேற வழி தெரியல.

சார்!!!!!!!!!!!!! 

ஆமா! தம்பிகளா. எனக்கும் மகன் மகள் இருக்காங்க. என் சொந்தத்துலயும் ஒன்னமாதிரி பெரிய மூக்கு வச்ச தும்மல்வாதிகள் இருக்காங்க. அதெல்லாம் நெனச்சுத்தான்…..

விசைக்கு தலை கொடராட்டினம் போல் சுத்தியது. பொத்தென்று விழுந்தான்.

தண்ணி தெளித்து எழுப்பியதும்,

“இரண்டுபேரும் பொடி நடையா நடந்து ஊரு வந்து சேருங்க. அதுக்குள்ள ஊரு சகஜநிலைக்குத் திரும்பிரும்”னு இன்ஸ்பெக்டர் சொல்லி வாய்மூடல… ரெண்டு தம்பிகளும் ரெண்டுகாலையும் கட்டிபுடிச்சுக்கிட்டு கதற ஆரம்பித்திருந்தார்கள்.

ஐயா! இன்ஸ்பெக்டரய்யா! தெய்வமே! ஊருக்குள்ள ஏகப்பட்ட கடன். எப்படியாவது நீங்க என்கவுண்டர் பண்ணிடுவீங்கன்ற தைரியத்துல மிஞ்சஞ்சொச்ச ஆளுக கிட்டயும் கடன வாங்கி பவுடர் டப்பாவும் புதுச்சட்டை பேண்ட்டும் போட்டுக்கிட்டு பகுமானமா வந்துட்டோம். இப்டி கைவிட்டீங்கன்னா நாங்க எங்க போவோம்? எங்களுக்கு யாரத்தெரியும்? எங்களுக்கு தற்கொலை பண்ணக்கூட புரசீசர் தெரியாதே சாமீ!?

என்க்கவுண்டரய்யா! நீங்க அப்டியெல்லாம் திடீர்னு நல்லவரா மாறக்கூடாது. கொஞ்சம் பழச நெனச்சுப்பாருங்க. நீங்க ஒரு சிங்கம். இப்டி நீங்களெல்லாம் நல்லவங்களா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா திண்டுக்கல்ல இருந்து மௌன இன்ஸ்பெக்டரவாச்சும் வரச்சொல்லி ரெக்வஸ்ட் லெட்டர் குடுத்திருப்போம்ல. இப்டி கடைசி நிமிசத்துல கால வாரி விடுறது ஒரு 
பொறுப்புள்ள அதிகாரிக்கு அழகா? ஐயா! எங்க பொண்டாட்டி கொழந்த குட்டிகளெல்லாம் உங்க போட்டோவ வச்சு கும்புடும். தயவுசெஞ்சு துப்பாக்கிய எடுங்கய்யா. தயவுகாட்டுங்க கருணாமூர்த்தியே!

அனைவரது முகத்திலும் ஒரு கலவரம்.

டிக்
டிக்
டிக்
.
.
.
நிசப்தம்

திடீரென இன்ஸ்பெக்டர் வாகனத்தைத் தாண்டி காட்டுக்குள் ஓட ஆரம்பித்திருந்தார்.
.
,
,
சில மாதங்களுக்குப் பிறகு,

ஐயா, காடு புல்லா தேடிட்டோம். தடயவியல் நிபுணர்கள வச்சு தேடுனதுல மொத்தம் 6 கால் தடம். 4 நம்மாளுகளோடது. 2 செருப்பில்லாத கால் தடம். ஒவ்வொரு ஒரு மாச இடைவெளில சூ போட்ட கால் தடங்களும் செருப்பில்லாத கால் தடங்களும் புதுசா பதிஞ்சுகிட்டே இருந்திருக்கு. தொல்லியல் துறையோட அறிக்கைப்படி, நமக்கு கடைசியா கிடைச்ச கால் தடத்தோட கடைசி 

பதிவு இன்னைக்கு காலைல 5.30க்கு.
.
.
.

வரும்!

வரும்!
வரும்!
வரும்!

Thursday, 14 March 2013

மாட்டுக்கார வேலா ஓன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா!


நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் ……………….
………….
கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு…..


எப்பவோ, பாரதியாருன்னு ஒரு பெருசு பாரத ஜனங்களோட இன்னைக்கி நெலமய நொண்டிச்சிந்துல பாடிவச்சிட்டு போச்சாம். ஆளு கிளிசோசியம் பாத்து பொழச்சிருக்கும்போல. அப்டியே அச்சு அசலா நம்மூர்ல இன்னைக்கு நடக்குறத சொன்னமாதிரியே சொல்லிருக்குடா.


அதுசரிடா மண்டையா? ஊருக்குள்ள என்ன பிரச்சினையாம்? – ஒன்னாப்பு படிக்கிற பயக மட்டமத்தியான வெயில்ல டவுசரோட கஞ்சிதண்ணியில்லாம கோசம்போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்காய்ங்கண்ணே, பள்ளிக்கோடத்துக்குள்ள போகாம.

எதுக்காம்?

ஏதோ எலங்கபட்டி பிரச்சினையாம்.

அதுக்கு இவய்ங்களுக்கு என்னவாம்?

அதான்ணே எனக்கும் தெரியல?

பள்ளியோடத்துகுள்ள போலன்னா எலங்கபட்டில 
மழைபேஞ்சுருமா?

எவனாச்சும் மைய தடவி ஒக்கார வச்சிருப்பானோண்ணே?

சரி என்னதான் வேணுமாம் அவய்ங்களுக்கு?

அந்த ஊருல எல்லா ஜனங்களும் ஒன்னாமின்னா சந்தோசமா இருக்கணும்னுதானாம்ணே!

நல்லவிசயந்தான? அதுல என்ன தப்பிருக்கு? இப்ப என்னாவாம்?

அந்தூரு தெக்குத்தெருவுகாரய்ங்க வடக்குதெருவுகாரய்ங்கள அடிச்சு வெரட்றாய்ங்களாம்ணே. பொம்பளபிள்ள பிஞ்சு பொடுசுன்னுகூட பாக்காம சகட்டுமேனிக்க அடிச்சு வெரட்டி கொன்றுக்காய்ங்கண்ணே!

சரி! அதுக்குன்னு நம்மூர்ல பள்ளியோடத்து போகாம இருந்தா என்ன கெடைக்கப்போகுதாம்? அந்தூரு தெக்குத்தெருவுகார ஆளு எதுவும் வாத்தியாரா இருக்கா?

பள்ளியோடத்தபத்தி எனக்கென்னணே தெரியும்?! ஆனா இத நான் கேட்டதுக்கு ஒரு அர டிக்கட்டு, “உங்க ஊரு தெருக்கொழாயில குடிதண்ணி வரலன்னா எதுக்கு மெயின் ரோட்டுக்கு போயி பஸ்ஸ மறிக்கிறீங்க? பஸ்லயா தண்ணி வருது? அது எதுக்குன்னு சொல்லு இதச்சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டான்ணே”. இனிமேல் இவய்ங்ககிட்ட வாய குடுக்கக்கூடாதுண்ணு அப்பவே எனக்கு ஒறச்சுருச்சுண்ணே!

எல்லாஞ்சரிதான்டா! ஆனா, இப்டி கொடிபுடுச்சுக்கிட்டே இருந்தா எல்லாஞ் சரியாகிடுமா?

ம்க்கும்! இதத்தேன் வண்டிக்கார தானாபானா கேட்டாராம்.  எல்லாப்பெயலும் சிலேட்டுகுச்சிய தூக்கி எறிஞ்சு வெரட்டிருக்காய்ங்க.

ஆமா! அதுவுஞ்சரி தான! அந்தாளுக்கு என்ன தெரியப்போகுது கஞ்சிதண்ணியில்லாம கத்தி கோசம்போடுறதப்பத்தி. முன்னப்பின்ன குடிச்சிருந்தாத்தான டாஸ்மார்க் பார்ல மொச்சப்பயறு வெல தெரியும்?

சரி! ஒரு ஊர்ல ஒன்னாப்புகாரய்ங்க பள்ளியோடம் போகலன்னு எல்லா ஊர்லயும் ஒன்னாப்பு ஒதுங்கியிருப்பு ஆகிடுச்சு. அப்புறம்?

அப்புறமென்ன, எல்லாரும் பக்கத்து ஊரு கம்மா கரயில ஒன்னுகூடி கோசம் போட போறாய்ங்களாம்.

ஓ! கொள்ளப்பெயலுக கூடப்போறாய்ங்கன்னு சொல்லு? அப்புறம்?

அப்புறமென்ன, அப்டியே கொஞ்சங்கொஞ்சமா, கா பரிச்ச வந்துருச்சு, வாத்தியார் சொன்னாரு அங்க போகாத, ஆயா சொன்னா இங்க போகாதன்னு கழண்டுக்கிருவாய்ங்கண்ணே.

ஆனா, அப்டி தெரியலயேடா? எனக்கென்ன தோணுதுனா, எல்லாவீட்லயும் பள்ளியோடம் போற ஜாதி இருக்குடா! அவய்ங்கள பெத்தவங்களும் ஒணந்து அவங்கவங்க வேலைவெட்டிக்கு போற பண்ணைகள்ல இதே மாதிரி கோசம் போடுவாய்ங்களோ? அப்டி இல்லன்னா, இந்த பயலுக போயி இவய்ங்களமாதிரியே ஒத்துவாழ்ற ஜாதியான வயக்காட்டுவேலைக்காரய்ங்க, கெணறுவெட்றவய்ங்க, கெடையமத்துறவய்ங்க, இப்டி எல்லா கூட்டத்தோடயும் கலந்து பேசி ஒன்னுசேத்ருவாய்ங்களோ? அப்டியே அந்தச்சொந்தம் இந்தச்சொந்தம்னு ஒன்னு சேர்த்தா, மொத்த ஊரே தெரண்ட மாதிரி தான? ஊரே தெரண்டுருச்சுன்னா, நம்ம பண்ணையார்னால மிசுங்கமுடியாதுல? அப்டி வர்றாய்ங்களோ?

அது இருக்கட்டும்ணே, இது என்ன உள்ளூர் வெவகாரமா, பண்ணையாரவச்சு நம்ம பஞ்சாயத்துல பேசி தீக்குறதுக்கு? பிரச்சன 18 பட்டி பஞ்சாயத்துக்கு போயிருச்சாம்லணே?

அடே! மண்டையா, 18அங்க, பட்டியில பெரிய பட்டிக்காரன் என்னமோ கணக்குப்போட்டு, எதாவது ஒன்ன சொல்லிக்கிட்ருப்பான். நாம அதெல்லாம் நம்பக்கூடாது. நம்ம பண்ணையார வச்சு அவங்க ஊர சாம, பேத, தான, தண்ட உபாயங்கள ஏவிவிட்டு வழிக்கு கொண்டுவந்துரணும்டா! அதுக்குத்தாண்டா இம்புட்டும்.

நம்ம பண்ணைக்கு அம்புட்டு எசக்கு இருக்காணே?

என்னடா இப்டி கேட்டுப்புட்ட? இந்தா இருக்க 500 தலக்கட்டுள்ள ஒத்தக்காவித்தி பெயலுக ஊர ஒழுங்குபடுத்த தெறமில்லன்னா பெறகெதுக்கு 5000 தலக்கட்டு ஊரு? அதுக்கொரு பண்ணையாரு?

ஏன்ணே? இதெல்லாம் தப்பில்லையா? அவங்க ஊர்ல போயி நம்ம???? 

ஏன்டா, பங்களாபட்டியில ஊர் புகுந்து பொண்ணத்தூக்குனது யாருன்னு மறந்துட்டியா? நம்ம பண்ணையோட சிய்யாந்தாண்டா? அன்னைக்கி அது தப்பா தெரிஞ்சிருந்துருக்கலாம். ஆனா, அத தப்புன்னு இன்னைக்கு எவனாச்சும் சொல்வானா? ஆப்புகானாபட்டியில பெரியபட்டி மிராசு ஒரண்டையிழுத்தப்ப வண்டிமாடு ஆளு அம்போட போனது யாரு? நம்ம பெயக தான? நம்ம பண்ணை சொல்லித்தான?

அப்ப என்னண்ணே செய்யச்சொல்றீங்க?

“எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவமென்ப திழுக்கு”

அப்டீன்னு நம்ம பண்ணையோட பாட்டன் சொல்லிருக்கான்டா. 
புரிஞ்சா பொழச்சுக்க. இல்லாட்டி போயி பொழப்பப்பார்றா!


எருமை கன்டுக்குட்டியுடன்,
மாட்டுக்கார வேலன்.

Friday, 31 August 2012

காலஞ் செய்த கோலமடி!

           


           தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் ஈமு கோழி வளர்ப்பவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையுடன் வருடத்திய போனசும் வழங்கப்படுமென்ற பத்திரிக்கை விளம்பரங்களை நம்பி பணம் கட்டி சேர்ந்தவர்கள் பலர். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களைக் கைவிட்டது அவர்கள் சேர்ந்த நிறுவனங்கள். இதன் விளைவாக, ஊடகங்களுக்கு ஒரு ஊழல் சென்சேசன் செய்தியும் ஏமாந்த பல பாமர ஜனங்களின் இல்லங்களில் கதறல் ஓலங்களும் கடந்த 2மாத காலத்தில் தமிழகத்தையே உலுக்கியது.

          இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். ஈமு கோழி மருத்துவ குணம் மிக்கது என்றும் அதன் இறைச்சியும், அதிலிருந்து வரும் பை-புராடக்ட்சும் பல்வேறு நோய்களுக்கு மருந்தென்றும் மொத்தத்தில் இது வளர்ப்பது வருங்காலத்தில் லாபகரமானதென்றும் மிகத் துள்ளியமாகக் கணித்த சில அரைவேக்காடுகள் உடனடியாகக் களத்தில் குதித்தன.



அடிப்படைத் திட்டம்: ஈமு கோழி இறைச்சியை மக்களிடம் பிரபலப்படுத்தி விட்டால், பிராய்லர் கோழிக்கு மாற்றாக்கி அதன் மூலம் நாடெங்கும் இதனை மார்க்கெட்டிங் செய்து விடுவது என்பது தான் அவர்களின் ஆரம்ப யுக்தி. நல்லது தான்.

           மேற்கண்டவாறு செயல்படுத்தும் பட்சத்தில் பிராய்லரை விட பல மடங்கு விலையுள்ள ஈமுகோழிகளின் தேவை இன்றைய பிராய்லர் கோழி கறி விற்பனை அளவான, நாளொன்றுக்குப் பல லட்சம் கிலோக்கள் என தேவைப்படும் என்ற தொலைநோக்கு சிந்தனையும் சரியே! இதற்கான முதலீட்டையும் பராமரிப்புச் செலவுகளையும் நைசாகப் பேசி பொறுப்பை பலருக்கு பகிர்ந்து கொடுக்கும் காண்ட்ராக்ட் பார்மிங் தத்துவமும் சரியே!



என்னதான் பிரச்சினை?: முதலில் ஒரு ஓட்டல்(ஈமு கறி ருசியை மக்களுக்கு பழக்கப்படுத்த) ஒரு பண்ணை என்று ஆரம்பித்து அதில் நிறைவுகண்ட பின் படிப்படியாக அதை எல்லா ஊர்களுக்கும் விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். இதுதான் காலங்காலமாக விரிவாக்கம்(Extension) என்பதன் அடிப்படைத் தத்துவம். ஆய்வுக்கூடங்களில் பெற்ற வெற்றியை படிப்படியாக பீல்டுக்கு கொண்டு செல்வதும், அவற்றை கடைநிலை பண்ணை ஊழியனுக்கு கற்றுக் குடுப்பதும் இதனுள் அடங்கும். 

         இந்த அடிப்படைத் தத்துவத்தை மறந்து ஒரே பாட்டில் பெரியாளாக வேண்டுமென்ற நினைப்பில் எல்லோருக்கும் ஆசைகாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு திட்டத்தில் 100பேரைச் சேர்க்கிறோமென்றால் அதில் அனைவருமே முழுமையாக அதைப் புரிந்துகொண்டு சேர்ந்திருப்பதாக நினைத்தால் அது மூடத்தனம். 80-20 விதிப்படி, எந்த ஒரு குரூப்பிலும் 80சதவீதத்தினர் நம்பிக்கையுடனும் 20சதவீதத்தினர் அரைமனதுடனும் தான் இணைந்திருப்பார்கள். அந்த 20சதவீதத்தினரால் எந்நேரமும் பிரச்சினை வரக்கூடும். அதானால் கிரிசிஸ் மேனேஜ்மெண்ட் (Crisis Management) செய்வதற்குத் தேவையானவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


           அந்தப்பக்கம், மார்க்கெட்டிங்க் என்பது குதிரைக் கொம்பு. அதுவும் பிராய்லர் கறி ருசிகண்ட பூனைகளுக்கு திடீரென்று ஈமு கறியை காட்டி பழகச் சொல்வதென்பது மாயாண்டிக்கு பொன்னாத்தாவை விலக்கிவைத்து விட்டு ஐஸ்வர்யா ராயை கட்டிவைப்பது போன்றது. ஐஸ்வர்யா ராயுக்கு களை வெட்டவோ, கஞ்சிக் கழையம் சுமக்கவோ தெரியாது. அதனால், உலகத்திலேய் மிகச் சிறந்ததை குடுக்கிறோமென்றாலும் அது யாருக்கு, என்ன தேவையுடையவனுக்கு குடுக்கப் படுகிறதென்பதை முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும். 

            இப்படி எல்லாவற்றிலுமே அவசரப்பட்டு அகலக்கால் வைத்துவிட்டு அதனால் பல குடும்பங்களின் பாவத்தையும் கொட்டிக் கொண்டதே இந்த நவீன யுக வாழவைக்கும் தெய்வங்களின் தனித்தன்மை!

             இன்னும் நிறைய இருக்கிறது. வேண்டுவோர் கமெண்டில் கேட்டுத் தெரிந்து கொள்க!

             இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமே, இது போன்ற எந்தத் திட்டத்தையும் மேற்கண்ட எல்லா விவரங்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பின் அவர்களிடன் முடிவெடுங்களெனக் கேட்டுக் கொள்வதே! 

            மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தில் ஈமு கோழிக்குப் பதில், நாட்டுக் கோழி, மருந்து வெள்ளரி, ஜட்ரோபா, அகர் மரம், மூலிகைச் செடிகள் வளர்ப்பு.... போன்ற அனைத்து வந்த வரப்போகும் திட்டங்களுக்கும் பொருத்திப் பார்த்துத் தெரிந்து கொள்க.

Tuesday, 31 July 2012

பூவே இளைய பூவே...!





கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

source: இணையத்திலிருந்து... 

Wednesday, 20 June 2012

Life at certain times!




A man found a cocoon of an emperor moth. He took it home so that he could watch the moth come out of the cocoon. On the day a small opening appeared, he sat and watched the moth for several hours as the moth struggled to force the body through that little hole.

The moth seemed to be stuck and appeared to have stopped making progress. It seemed as if it had gotten as far as it could and it could go no farther. The man, in his kindness, decided to help the moth; so he took a pair of scissors and snipped off the remaining bit of the cocoon. The moth then emerged easily. But its body was swollen and small, its wings wrinkled and shriveled.




The man continued to watch the moth because he expected that, at any moment, the wings would enlarge and expand to and able to support the body, which would contract in time. Neither happened! In fact, the little moth spent the rest of its life crawling around with a small, swollen body and shriveled wings. It never was able to fly.

The man in his kindness and haste did not understand that the struggle required for the moth to get through the tiny opening was necessary to force fluid from the body of the moth into its wings so that it would be ready for flight upon achieving its freedom from the cocoon. Freedom and flight would only come after the struggle. By depriving the moth of a struggle, he deprived the moth of health.



 
Sometimes struggles are exactly what we need in our life. If we were to go through our life without any obstacles, we would be crippled. We would not be as strong as what we could have been. Give every opportunity a chance, leave no room for regrets, and don't forget the power in the struggle. 


 

கொயந்த புள்ளய்ங்களுக்கொசரம்!




Saturday, 5 May 2012

நாட்டுப்புறத்தானாகிய நான்!


அதென்ன மாயமோ, என்னமோ தெரியறதுல்ல எனக்கெதுவுமே வெளங்கினதில்ல!

தமிழ்நாட்டுலயே அந்த கோர்ஸ் உள்ள ஒரே காலேஜ்ல சீட் வாங்கி உள்ளபோயி ஒக்காந்தா, எல்லாம் பெரிய எடத்து பச்சக்கிளிங்க! ஈரோடு பக்கமிருந்து தான் அதிகம்!

அவள் ஏதோ கேட்க, நான் ஏதோ சொல்ல, அருகிருந்தவள் “சரியான நோஸ் கட்டுடீ”ன்னா. எனக்கு எதுவுமே புரியல.

சிஸ்டர், சிஸ்டர்னு “நெருக்கமா” பேசிக்கிட்ருந்தாய்ங்க பீட்டர்களின் பேரன்கள். ”அக்கா” என்ற உறவு அதற்காகத்தான் ஆசிர்வதிக்கப் பட்டிருப்பதை அப்போதும் உணராமல்.

எல்லோரிடமும் சகஜமாகப் பழக நினைத்தேன், குரூப் குரூப்பாக ஜெராக்ஸ் எடுக்கச் சென்றார்கள். டீக்கடைக்குத் தான் செல்கிறார்களென்பதை அறிந்திலன்.

உடன்படித்த தேவதைகளெல்லாம் அருகே வந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதொ வினவ, அவர்கள் எதிர்பார்த்த பதிலைச் சொல்ல என்னிடம் இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட்(பின்புல ஆராய்ச்சிப் பொரணி) இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 3பேராவது என்னை நிறைய எதிர்பார்த்தார்களென்பது அடுத்த 5ஆண்டுகள் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை.

எந்த ஆசிரியரிடமும் வகுப்பைத் தவிற வேறு இடத்தில் சென்று பேசியதில்லை. எந்த நேரத்திலும் அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்ததில்லை. அவுத்துவிட்ட மாடு மாதிரி திரியிற இவனுக்கெதுக்கு மார்க்குன்னு பலபேர் எண்ணியிருக்கக் கூடும்.

எந்த ஒரு டூர் சென்றாலும் சின்ன ஹோட்டல் எங்க இருக்கு என்று தேடி அலைவதற்கே நேரம் சரியாயிருக்கும். (என்னையும் ஒரு குரூப் பின் தொடர்ந்ததென்றும், கன்னியாகுமரியில் அப்படிப்பட்டதொரு ஓட்டலில் புழுபூச்சி சாம்பார் சாப்பிட்ட கதையும் உண்டு) இதனாலேயே ஓட்டல்களை கண்ணாலேயே தேர்ந்தெடுப்பதில் வல்லமை பெற்ற திருவிளையாடலும் உண்டு

மாலை நேரங்களில் கடைத்தெருவில் சுற்ற “குபேரனின்” ஆசி இல்லாததால் விளையாட்டு மைதானமே கதி என்று அனைத்து விளையாட்டையும் கற்றுக் கொண்டதும் வரலாற்றில் உள்ளடக்கம்


எனக்குத் தெரிந்த எளிய வழியில் ஏன் அந்த காரியத்தை முடிக்கக் கூடாதென்று மேனேஜரிடம் வாதாடிய என்னை தனியாகக் கூப்பிட்டு எட்டிகொயட் கத்துக்கொடுத்த காலமும் உண்டு

கடைசியா, எல்லாத்தையும் விட்டுப்புட்டு சொந்தமா நாமே ஒரு தொழில ஆரம்பிப்போம்னு இந்தியா வந்தா, இங்க அட்வைஸ் எல்லாமே, “ஒரு ஸ்டேஜிக்கு வந்த பிறகு அதை மெய்ண்டைன் பண்ணனும் சார். அத விட்டுட்டு கேரியர் குரோத் கர்வ நோஸ்டைவ் அடிக்க விட்டு எர்ராட்டிக்கா லைப் கிராப் வரையக்கூடாது” என்று போதிமர தீட்சை அளிக்கும் நண்பர்களும் என்னுடனே!

சிந்தனையில் தெளிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் துணிவும் மட்டுமல்ல, சூழ்நிலையையும் கிரீனாக வைத்திருக்கும் போது தான் மனம் அமைதியடையும். வாழ்க்கை இறகாய் மிதக்கும்!

 
எவ்வளவோ பண்ணிட்டோம்.......

Tuesday, 17 April 2012

வாழ நினைத்தால்.....


முன்னிருக்கையில் நீ, பின்னிருக்கையில் நான்!
உன்னருகில் கோவலன், என்னருகில் கும்பகர்ணன்!
அலைபாயும் கூந்தலில் அருவிக்கொத்தாய் முல்லைச் சரம்!
அறக்கப்பறக்க ஓடி வந்ததில் கலங்கிய குளமாய் என்முகம்!
அசைந்தது உன் சிரம், குலுங்கியதென்னவோ வாகனம்!
அழுத்தியழுத்தி அவனும் கேட்டுப்பார்த்தான், படியவில்லை நீ!
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறேன், கும்பகர்ணன் கொடுத்த இடைவெளியில் இவையெல்லாம்,

கூந்தலே பர்தாவாம், குறுக்கே ஆட்டும் தலையே விளக்கமாம்!
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டான் அக்கயவன், அவசரமாய் வந்தமர்ந்தேன் உன்மடியில் பின், சரிந்து உன்னருகில்!
சினுங்கிச் சிதறினாய்! கோர்த்தனைத்தேன் மன்னிப்புக்கோரிக்கைகளால்!
போவதெங்கே அவசரமாய்!? ஆவலுடன் கேட்டது நீ! நிலைகுழைந்து சொருகிய கண்களைக் குவித்துச் சொன்னேன், பக்கத்தில் தான்!
எனக்கொரு டிக்கெட் அந்தப்பக்கம் சொன்னது நீ! சொல்லியவாய் மூடவில்லை, பாராசூட்டில்லாமல் குதித்தது நான்!

பின்னங்கால்கள் பிடறியில் பட பிடித்தேன் ஓட்டம் கீழிறங்கி!
முக்கால் மணி நேரம், மூன்று மைல் தூரம், மூன்று வீதிகள் அதிகமாகவே ஓடியிருக்கிறேன் முழித்துப்பார்த்தபோது!

அடுக்களைக்குள் அவள்! அலட்சியப்படுத்தாமல், அடுத்த அறைக்குள் நுழைந்த என்னை அழைத்தாள் நக்கலாக!

இன்னிக்கு பர்ஸ மறந்துட்டுப் போனீங்களே? பஸ் பாஸ், பைக்குள் இருந்ததா? உயிர் போனாலும் கடன் வாங்கேன் என்பீரே! ஆறு மணிக்குள் திரும்பாவிட்டால் மாலைக்கண் மானம் தூற்றுமென்பதறியீரோ?
சிட்டுக்குருவி லேகியமென்று இத்தனை நாளாய் குழந்தையின் சப்பட் லோசனை தின்றிருக்கீரே! என்ன செய்ய உம்மை?
........
தலைக்குள் ராட்டினமும், கண்களுக்குள் கருமேகமும், ஒருசேர வந்து திரள, சத்தமின்றிச் சாய்ந்தது சோபாவில், ஒண்டிப்புலி!

Wednesday, 7 December 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா! நீங்க வாங்க பாஸ்! இவய்ங்க எப்பவுமே இப்படித்தான்!

டேய்! எவனாவது எங்க சங்கு சாங்கியத்த பத்தி தப்பா பேசுனீங்க......

Tuesday, 29 November 2011

இந்தியா ஒழிகிறது?

 இனிமேல் எவனாவது ஆந்திராகாரய்ங்கள கொல்டீன்னீங்க, தக்காளி கொன்னேபுடுவேன்! எம்புட்டு அறிவு!

 ஹலோ! இசையருவி .......மேடமா? நீங்க அநியாயத்துக்கு அழகாருக்கீங்க மேடம், ஒங்க குரல் அப்டியே என்ன தூங்கவிடாம பண்ணுது! இந்த 3 படத்துல இருந்து ஒய் திஸ் கொலவெறி சாங் வேணும் மேடம். டெடிகேசனா? ஆல் கபாலீஸ்ன்னு சொல்லுங்க அல்லாருக்கும் பிரியும்!
 என்னைக்கு ராமன் செருப்ப கழட்டி குடுத்துட்டு காட்டுக்கு போனானோ, அன்னைக்கிருந்து இதோட மதிப்பு ஏரிப்போச்சுயா!


 டேய்! டேய் டேய்! இருங்கடா! கெழவிய பத்தி தப்பா நெனச்சுராதீங்கடா! அந்த ஆட்டுகுட்டிக்கு ஆட்டோகேட் சொல்லிகுடுத்துகிருக்குடா! எங்கன்னு கேக்குரியா? ஆண்டிபட்டியிலதேன்! வேணும்னா ஆண்டிபட்டிக்கு போயி ஆட்டுக்கார அலமேலு அப்பத்தான்னு கேட்டுபாருங்களேன்!!!!




  நமக்கெதுக்கு வீண் வம்பு! ஏம்பா, அடுத்த ட்ரெய்ன் இந்த ரூட்ல எத்தனை மணிக்கு!



நான் அப்பவே சொல்லல! ரஜினிய ஆட்டோ ஓட்டவிட்டா இப்டியெல்லாம் நடக்கும்னு!

Saturday, 26 November 2011

Monday, 21 November 2011

Sunday, 20 November 2011

Thursday, 3 November 2011

அப்பாடக்கர் - விளக்கவுரை!

Appatakkar ku meaning :P
எவ்வளோ அப்பாடக்கர்ஸ் இருந்தாலும் யாருக்கும் சரியான அர்த்தம் தெரியாது !

கவலைய வி...டுங்க.....

கண்ணீர துடைங்க ....

i will explain...


' அப்பாடக்கர் ' என்றால் என்ன?


இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ்.
மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர்.
வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது.
அப்பாடக்கர் ஸ்கூலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)


( நன்றி : தோழர்.ரோஜாராமன் ! )

கட்டிங்,ஒட்டிங்அன்ட் எடிட்டிங் : உங்கள் ' மனோசெந்தில் ' .
[ யாருப்பா அது விசிலடிக்கிறது.... எனக்கு விசிலடிச்சா பிடிக்காதுன்னு தெரியும்ல ! ]

தமிழ்க்குடிமகன்களுக்கு மட்டும்!

Tuesday, 1 November 2011

மச்சான்! சாச்சுபுட்டா மச்சான்!

இதுக்குத்தான் இந்த இங்கிலிபீசு காரிகளயே நெம்பக்கூடாதுன்றது. எனக்கு வேணும், எனக்கு வேணும்...

சிகையழகிகள்!

லூஸ் கேர் விடுறதுன்னா, ஹேர் இப்படி இருக்கணும். அதவிட்டுட்டு சும்மா....