Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, 1 August 2013

இருட்டறைக்குள் முரட்டுக்குத்து

வெள்ளை நிற டெம்போ டிராவலர் வண்டி ஹைதராபாத்தை விட்டு நாகார்ஜூன சாகரை நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்ததது. கண்ணாடி ஜன்னல்களெல்லாம் திரையிட்டு மூடப்பட்டிருந்ததால் உள்ளே நடப்பது வெளியே தெரியாது.

ரோட்டோரமாக வண்டியை நிறுத்தி உள்ளிருந்து காவல்துறை சீருடையணிந்த இருவர் இறங்கியதும் அசீத் கேட்டான்,
“டேய் விசை! இதுக்குப்பேரு தான் இருட்டறைக்குள் முரட்டுக் குத்தாடா”

இங்கு தொடங்குகிறது நம் கதை!

”ஏண்டா! இன்னுமாடா நீங்க திருந்தல?” கேட்டது பெருந்தொப்பை ஏட்டைய்யா.

”அப்டி என்னதான் சார் தப்பு பண்ணாய்ங்க?” டிபார்ட்மெண்டின் புதுவரவு ஏட்டைய்யா.

மொளகா வத்தல் கடைக்கார செட்டியாரு வரும் போது இந்த அசீத் குமார் பெய தும்மிருக்கான். அவரு வீட்டுக்குப்போனதும் நாண்டுக்கு தொங்கிட்டாரு.

ஐய்யய்யோ! அந்த அளவுக்கு போயிருச்சா ஏட்டைய்யா? சரி கூட இருக்கவன் என்ன செஞ்சான்?

அவந்தான்யா பதில் தும்மல் தும்மிருக்கான்.

ஓ! அப்ப கன்பார்ம் தும்மல் விசையோடதுன்னு சொல்லுங்க.

அட! ஆமாய்யா! நம்ம இன்ஸ்பெக்ட்ரு சார் பத்தி தெரியும்ல? அவரு அணைக்கட்டுக்கு கூட்டி போனவன் எவனும் உசுரோடவோ பொணமாவோ கூட திரும்பினதில்ல.

அதான் ஒனக்கு அடிச்சு பிராக்டிசு ஆகட்டுமேன்னு வழிநெடுக அடிக்கவிட்டு கூட்டியாந்தேன்.

இதற்கிடையே இருள்சூழ் வண்டிக்குள்….

அசீத்து, ஏண்டா நேரங்காலந்தெரியாம! இங்க வர்றதுக்குப் போயி இம்புட்டு பவுடர அப்பிருக்க?

விசையண்ணே! நீங்க மட்டும் என்னவாம்? எதுக்கு பச்சை சட்டை செகப்பு பேண்ட் போட்டு வந்திருக்கீங்க?

எப்டியோ என்கவுண்டர் பண்ணதுக்கப்புறம் பொணத்தோட மூஞ்சிய குளோசப்ல டிவில காட்டும் போது ஒரு பொண்ணுக்காச்சும் புடிக்கும்ல. செத்தும் கரெக்ட் பண்ணிய காவியக் கட்டழகன்னு இச்டீடீ பேசவேணாமா? அதுக்குத்தான்.

கரெக்ட் கரெக்ட்! 

சரி, நீ எதுக்கு இந்த பேண்ட் சட்டை போட்டு வந்தன்னு சொல்லு?

பச்சை சட்டை போட்டவன பக்கத்துல வச்ச சுடுறதுக்கும் மத்தவய்ங்கள ஓடவிட்டு சுடுறதுக்கும் பழகுனவறாம் இந்த இன்ஸ்பெக்டரு. ஒரு புக்ல படிச்சிருக்கேன்.

அடத்துரோகி!

டேய்! என்னடா அங்க சத்தம்? இன்ஸ்பெக்டரய்யா வரச்சொல்றாரு. எறங்கி வாங்கடா!

சரக் சரக்…..

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…..

ஊ ஊஊஊ ஊஊஊ….

தம்பிங்களா! ஒங்க ரெண்டுபேத்தையும் ஏன் நான் இங்க கொண்டுவந்தேன் தெரியுமா?

என்னையும் விசையையும் என்கவுண்டர் பண்ணத்தானங்யா? பண்ணுங்கய்யா பண்ணுங்க? ஆனா, கடைசியா ஒருதடவ காயத்ரி மந்த்ரம் சொல்லி கங்காஸ்நானம் பண்ணிக்கிட அனுமதி கொடுங்கய்யா. போற எடத்துக்கு புண்ணியமா....

மன்னிச்சிருங்க தம்பிகளா. ஒங்கள கூட்டிவந்தது என்கவுண்டருக்காக இல்ல. நீங்க பண்ண சமுதாயச்சீர்கேட்டால ஒரு உயிர் போயிருச்சு. அதுவும் மொளகா வத்தக்கடை ஓனரு. ஊருக்குள்ள பெரியமனுசன். அதனால, 
மொளகாக்கடை செட்டியார்கள் சங்கத்துல இருந்து எங்களுக்கு ரொம்ப பிரசரு. வேற வழியில்லாம ஒங்க ரெண்டுபேத்தையும் அரெஸ்ட் பண்ணிட்டோம். எங்களுக்கு இதத்தவிற வேற வழி தெரியல.

சார்!!!!!!!!!!!!! 

ஆமா! தம்பிகளா. எனக்கும் மகன் மகள் இருக்காங்க. என் சொந்தத்துலயும் ஒன்னமாதிரி பெரிய மூக்கு வச்ச தும்மல்வாதிகள் இருக்காங்க. அதெல்லாம் நெனச்சுத்தான்…..

விசைக்கு தலை கொடராட்டினம் போல் சுத்தியது. பொத்தென்று விழுந்தான்.

தண்ணி தெளித்து எழுப்பியதும்,

“இரண்டுபேரும் பொடி நடையா நடந்து ஊரு வந்து சேருங்க. அதுக்குள்ள ஊரு சகஜநிலைக்குத் திரும்பிரும்”னு இன்ஸ்பெக்டர் சொல்லி வாய்மூடல… ரெண்டு தம்பிகளும் ரெண்டுகாலையும் கட்டிபுடிச்சுக்கிட்டு கதற ஆரம்பித்திருந்தார்கள்.

ஐயா! இன்ஸ்பெக்டரய்யா! தெய்வமே! ஊருக்குள்ள ஏகப்பட்ட கடன். எப்படியாவது நீங்க என்கவுண்டர் பண்ணிடுவீங்கன்ற தைரியத்துல மிஞ்சஞ்சொச்ச ஆளுக கிட்டயும் கடன வாங்கி பவுடர் டப்பாவும் புதுச்சட்டை பேண்ட்டும் போட்டுக்கிட்டு பகுமானமா வந்துட்டோம். இப்டி கைவிட்டீங்கன்னா நாங்க எங்க போவோம்? எங்களுக்கு யாரத்தெரியும்? எங்களுக்கு தற்கொலை பண்ணக்கூட புரசீசர் தெரியாதே சாமீ!?

என்க்கவுண்டரய்யா! நீங்க அப்டியெல்லாம் திடீர்னு நல்லவரா மாறக்கூடாது. கொஞ்சம் பழச நெனச்சுப்பாருங்க. நீங்க ஒரு சிங்கம். இப்டி நீங்களெல்லாம் நல்லவங்களா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா திண்டுக்கல்ல இருந்து மௌன இன்ஸ்பெக்டரவாச்சும் வரச்சொல்லி ரெக்வஸ்ட் லெட்டர் குடுத்திருப்போம்ல. இப்டி கடைசி நிமிசத்துல கால வாரி விடுறது ஒரு 
பொறுப்புள்ள அதிகாரிக்கு அழகா? ஐயா! எங்க பொண்டாட்டி கொழந்த குட்டிகளெல்லாம் உங்க போட்டோவ வச்சு கும்புடும். தயவுசெஞ்சு துப்பாக்கிய எடுங்கய்யா. தயவுகாட்டுங்க கருணாமூர்த்தியே!

அனைவரது முகத்திலும் ஒரு கலவரம்.

டிக்
டிக்
டிக்
.
.
.
நிசப்தம்

திடீரென இன்ஸ்பெக்டர் வாகனத்தைத் தாண்டி காட்டுக்குள் ஓட ஆரம்பித்திருந்தார்.
.
,
,
சில மாதங்களுக்குப் பிறகு,

ஐயா, காடு புல்லா தேடிட்டோம். தடயவியல் நிபுணர்கள வச்சு தேடுனதுல மொத்தம் 6 கால் தடம். 4 நம்மாளுகளோடது. 2 செருப்பில்லாத கால் தடம். ஒவ்வொரு ஒரு மாச இடைவெளில சூ போட்ட கால் தடங்களும் செருப்பில்லாத கால் தடங்களும் புதுசா பதிஞ்சுகிட்டே இருந்திருக்கு. தொல்லியல் துறையோட அறிக்கைப்படி, நமக்கு கடைசியா கிடைச்ச கால் தடத்தோட கடைசி 

பதிவு இன்னைக்கு காலைல 5.30க்கு.
.
.
.

வரும்!

வரும்!
வரும்!
வரும்!

Thursday, 14 March 2013

மாட்டுக்கார வேலா ஓன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா!


நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் ……………….
………….
கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு…..


எப்பவோ, பாரதியாருன்னு ஒரு பெருசு பாரத ஜனங்களோட இன்னைக்கி நெலமய நொண்டிச்சிந்துல பாடிவச்சிட்டு போச்சாம். ஆளு கிளிசோசியம் பாத்து பொழச்சிருக்கும்போல. அப்டியே அச்சு அசலா நம்மூர்ல இன்னைக்கு நடக்குறத சொன்னமாதிரியே சொல்லிருக்குடா.


அதுசரிடா மண்டையா? ஊருக்குள்ள என்ன பிரச்சினையாம்? – ஒன்னாப்பு படிக்கிற பயக மட்டமத்தியான வெயில்ல டவுசரோட கஞ்சிதண்ணியில்லாம கோசம்போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்காய்ங்கண்ணே, பள்ளிக்கோடத்துக்குள்ள போகாம.

எதுக்காம்?

ஏதோ எலங்கபட்டி பிரச்சினையாம்.

அதுக்கு இவய்ங்களுக்கு என்னவாம்?

அதான்ணே எனக்கும் தெரியல?

பள்ளியோடத்துகுள்ள போலன்னா எலங்கபட்டில 
மழைபேஞ்சுருமா?

எவனாச்சும் மைய தடவி ஒக்கார வச்சிருப்பானோண்ணே?

சரி என்னதான் வேணுமாம் அவய்ங்களுக்கு?

அந்த ஊருல எல்லா ஜனங்களும் ஒன்னாமின்னா சந்தோசமா இருக்கணும்னுதானாம்ணே!

நல்லவிசயந்தான? அதுல என்ன தப்பிருக்கு? இப்ப என்னாவாம்?

அந்தூரு தெக்குத்தெருவுகாரய்ங்க வடக்குதெருவுகாரய்ங்கள அடிச்சு வெரட்றாய்ங்களாம்ணே. பொம்பளபிள்ள பிஞ்சு பொடுசுன்னுகூட பாக்காம சகட்டுமேனிக்க அடிச்சு வெரட்டி கொன்றுக்காய்ங்கண்ணே!

சரி! அதுக்குன்னு நம்மூர்ல பள்ளியோடத்து போகாம இருந்தா என்ன கெடைக்கப்போகுதாம்? அந்தூரு தெக்குத்தெருவுகார ஆளு எதுவும் வாத்தியாரா இருக்கா?

பள்ளியோடத்தபத்தி எனக்கென்னணே தெரியும்?! ஆனா இத நான் கேட்டதுக்கு ஒரு அர டிக்கட்டு, “உங்க ஊரு தெருக்கொழாயில குடிதண்ணி வரலன்னா எதுக்கு மெயின் ரோட்டுக்கு போயி பஸ்ஸ மறிக்கிறீங்க? பஸ்லயா தண்ணி வருது? அது எதுக்குன்னு சொல்லு இதச்சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டான்ணே”. இனிமேல் இவய்ங்ககிட்ட வாய குடுக்கக்கூடாதுண்ணு அப்பவே எனக்கு ஒறச்சுருச்சுண்ணே!

எல்லாஞ்சரிதான்டா! ஆனா, இப்டி கொடிபுடுச்சுக்கிட்டே இருந்தா எல்லாஞ் சரியாகிடுமா?

ம்க்கும்! இதத்தேன் வண்டிக்கார தானாபானா கேட்டாராம்.  எல்லாப்பெயலும் சிலேட்டுகுச்சிய தூக்கி எறிஞ்சு வெரட்டிருக்காய்ங்க.

ஆமா! அதுவுஞ்சரி தான! அந்தாளுக்கு என்ன தெரியப்போகுது கஞ்சிதண்ணியில்லாம கத்தி கோசம்போடுறதப்பத்தி. முன்னப்பின்ன குடிச்சிருந்தாத்தான டாஸ்மார்க் பார்ல மொச்சப்பயறு வெல தெரியும்?

சரி! ஒரு ஊர்ல ஒன்னாப்புகாரய்ங்க பள்ளியோடம் போகலன்னு எல்லா ஊர்லயும் ஒன்னாப்பு ஒதுங்கியிருப்பு ஆகிடுச்சு. அப்புறம்?

அப்புறமென்ன, எல்லாரும் பக்கத்து ஊரு கம்மா கரயில ஒன்னுகூடி கோசம் போட போறாய்ங்களாம்.

ஓ! கொள்ளப்பெயலுக கூடப்போறாய்ங்கன்னு சொல்லு? அப்புறம்?

அப்புறமென்ன, அப்டியே கொஞ்சங்கொஞ்சமா, கா பரிச்ச வந்துருச்சு, வாத்தியார் சொன்னாரு அங்க போகாத, ஆயா சொன்னா இங்க போகாதன்னு கழண்டுக்கிருவாய்ங்கண்ணே.

ஆனா, அப்டி தெரியலயேடா? எனக்கென்ன தோணுதுனா, எல்லாவீட்லயும் பள்ளியோடம் போற ஜாதி இருக்குடா! அவய்ங்கள பெத்தவங்களும் ஒணந்து அவங்கவங்க வேலைவெட்டிக்கு போற பண்ணைகள்ல இதே மாதிரி கோசம் போடுவாய்ங்களோ? அப்டி இல்லன்னா, இந்த பயலுக போயி இவய்ங்களமாதிரியே ஒத்துவாழ்ற ஜாதியான வயக்காட்டுவேலைக்காரய்ங்க, கெணறுவெட்றவய்ங்க, கெடையமத்துறவய்ங்க, இப்டி எல்லா கூட்டத்தோடயும் கலந்து பேசி ஒன்னுசேத்ருவாய்ங்களோ? அப்டியே அந்தச்சொந்தம் இந்தச்சொந்தம்னு ஒன்னு சேர்த்தா, மொத்த ஊரே தெரண்ட மாதிரி தான? ஊரே தெரண்டுருச்சுன்னா, நம்ம பண்ணையார்னால மிசுங்கமுடியாதுல? அப்டி வர்றாய்ங்களோ?

அது இருக்கட்டும்ணே, இது என்ன உள்ளூர் வெவகாரமா, பண்ணையாரவச்சு நம்ம பஞ்சாயத்துல பேசி தீக்குறதுக்கு? பிரச்சன 18 பட்டி பஞ்சாயத்துக்கு போயிருச்சாம்லணே?

அடே! மண்டையா, 18அங்க, பட்டியில பெரிய பட்டிக்காரன் என்னமோ கணக்குப்போட்டு, எதாவது ஒன்ன சொல்லிக்கிட்ருப்பான். நாம அதெல்லாம் நம்பக்கூடாது. நம்ம பண்ணையார வச்சு அவங்க ஊர சாம, பேத, தான, தண்ட உபாயங்கள ஏவிவிட்டு வழிக்கு கொண்டுவந்துரணும்டா! அதுக்குத்தாண்டா இம்புட்டும்.

நம்ம பண்ணைக்கு அம்புட்டு எசக்கு இருக்காணே?

என்னடா இப்டி கேட்டுப்புட்ட? இந்தா இருக்க 500 தலக்கட்டுள்ள ஒத்தக்காவித்தி பெயலுக ஊர ஒழுங்குபடுத்த தெறமில்லன்னா பெறகெதுக்கு 5000 தலக்கட்டு ஊரு? அதுக்கொரு பண்ணையாரு?

ஏன்ணே? இதெல்லாம் தப்பில்லையா? அவங்க ஊர்ல போயி நம்ம???? 

ஏன்டா, பங்களாபட்டியில ஊர் புகுந்து பொண்ணத்தூக்குனது யாருன்னு மறந்துட்டியா? நம்ம பண்ணையோட சிய்யாந்தாண்டா? அன்னைக்கி அது தப்பா தெரிஞ்சிருந்துருக்கலாம். ஆனா, அத தப்புன்னு இன்னைக்கு எவனாச்சும் சொல்வானா? ஆப்புகானாபட்டியில பெரியபட்டி மிராசு ஒரண்டையிழுத்தப்ப வண்டிமாடு ஆளு அம்போட போனது யாரு? நம்ம பெயக தான? நம்ம பண்ணை சொல்லித்தான?

அப்ப என்னண்ணே செய்யச்சொல்றீங்க?

“எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவமென்ப திழுக்கு”

அப்டீன்னு நம்ம பண்ணையோட பாட்டன் சொல்லிருக்கான்டா. 
புரிஞ்சா பொழச்சுக்க. இல்லாட்டி போயி பொழப்பப்பார்றா!


எருமை கன்டுக்குட்டியுடன்,
மாட்டுக்கார வேலன்.

Wednesday, 20 June 2012

Life at certain times!




A man found a cocoon of an emperor moth. He took it home so that he could watch the moth come out of the cocoon. On the day a small opening appeared, he sat and watched the moth for several hours as the moth struggled to force the body through that little hole.

The moth seemed to be stuck and appeared to have stopped making progress. It seemed as if it had gotten as far as it could and it could go no farther. The man, in his kindness, decided to help the moth; so he took a pair of scissors and snipped off the remaining bit of the cocoon. The moth then emerged easily. But its body was swollen and small, its wings wrinkled and shriveled.




The man continued to watch the moth because he expected that, at any moment, the wings would enlarge and expand to and able to support the body, which would contract in time. Neither happened! In fact, the little moth spent the rest of its life crawling around with a small, swollen body and shriveled wings. It never was able to fly.

The man in his kindness and haste did not understand that the struggle required for the moth to get through the tiny opening was necessary to force fluid from the body of the moth into its wings so that it would be ready for flight upon achieving its freedom from the cocoon. Freedom and flight would only come after the struggle. By depriving the moth of a struggle, he deprived the moth of health.



 
Sometimes struggles are exactly what we need in our life. If we were to go through our life without any obstacles, we would be crippled. We would not be as strong as what we could have been. Give every opportunity a chance, leave no room for regrets, and don't forget the power in the struggle. 


 

Friday, 13 April 2012

இழப்பதற்க்கென்று இறுதியாய் ஒன்று...





பேய் மழையென்று யாரோ சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது கூந்தையனுக்கு! இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து சரிந்து வந்தவனுக்கு ஓரமாக ஒண்டிக்கொண்டிருந்த பூங்கொடியின் கை தட்டுப்பட்டது. ஐயோ! ராசா ஒனக்கு இன்னுமா ஒரக்கம் வரலை, கூரை ஓம்பக்கம் ஒழுகலைன்னு நெனைச்சேன், ஒழுகுன தண்ணி ஒன்னிய உசுப்பு விட்ருச்சாயா? வாயா வா! வந்து ஆத்தா மடிமேல படுத்துக்கஎன்று விம்மிய நெஞ்சுடன் வாரியணைத்து மடிமீது வைத்து உடல் குறுக்கி, இதமாய் உறங்கவைத்தாள்.

காக்காயன் ஓடிவந்தான். கூந்தையா! ஒங்கப்பன கல்லு போட்டு அமுக்கி கொண்டுபுடுச்சாம்டா! கொவாரில வேட்டு வச்சப்ப!என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தான். அவன் நம்மை ஏதோ சொல்லி திட்டுவது போல் தோன்றியதோ என்னவோ, அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. இழ்ந்தது எதுவென்றே தெரியாமல் முதன் முதலாக அவன் அழுதுகொண்டே தெரு நெடுகிலும் பிஞ்சுக்கால்களை புழுதியில் பதித்தபடி அம்மாவைத் தேடி ஓடிக்கொண்டிருந்தான்.

ரெண்டாங்கிளாஸ்ல யாருடா கூந்தையன்றதுஅலறினார் செம்பட்டை வாத்தியார். எல்லோர் முன்னிலையிலும் தன்னை மட்டும் அவர் பேர்சொல்லி கூப்பிட்டதில் கை கால்கள் வெடவெடக்க எழுந்து நின்றவனுக்கு, என்ன நடந் த தென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந் த து. காதெல்லாம் ஏதோ ஒரு நிசப்த ரீங்காரம் அரங்கேறிக்கொண்டிருந்தது. காக்காயன் எழுந்து இருவரின் மஞ்சப் பைகளையும் தேடி எடுத்து சிலேட்டைத் திணித்துக் கொண்டு இவனையும் பிடித்து இழுத்தவாறு நடந்தான். வீடு நெருங்க நெருங்க விருட்டென்று விலக்கிக்கொண்டு அம்மா என்றவாறு தாயிடம் அடைக்கலம் தேடிச்சென்றவனை, சுற்றி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த பெண்கள் தடுத்து நிறுத்தி, ஒங்காத்தா ஒன்னிய நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாடான்னு சொன்னது மட்டும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது ஓலங்களுக்கிடையே!

நாலு வருசத்துல ரெண்டு எழவாடா ஒங்க வீட்டுல? எதுக்கும் நீ நாளைக்கிருந்து எங்கூட கல்லொடைக்கிற எடத்துக்கு வா! ஓன் தம்பிக்கும் ஒனக்கும் அங்கயே கூலு கரைச்சு கொண்டுக்கு வந்துர்றேன். இங்கணயே ஒக்காந்து கஞ்சிக்கி வீடுவீடாப் போயி கையேந்திக்கிட்ருக்காதீங்கடா!அதிகாரமாய் ஒலித்தது சூடாமணி கிழவியின் ஆதங்கம். அப்பன் ஆத்தா உறுதுணை இல்லைன்னாலும் கிழவிகளுக்குப் பஞ்சமில்லைடா இந்த ஊருல! தங்கத்தாயி ஆத்தா வெளித்திண்ணையிலிருந்து!

எங்க போனான்டா ஓந்தம்பி சப்பானி! கெரட்டையன் மகள் வீரம்மாள கழுத்தறுத்துப் போட்டுட்டு போயிருக்கான்டா. ஊருக்குள்ள ஒங்கள வெறிபுடுச்சுத் தேடிக்கிட்ருக்காய்ங்கடா எளந்தாரிகளெல்லாம்! வேகமா ஓடியாடா!வென்று வெரசுபடுத்திக்கொண்டு முன்னே ஓடிக்கொண்டிருந்தான் காக்காயன். வெட்டுப்பட்டுக் கை கால்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாய் இணைத்து தம்பியாய் அடையாளப்படுத்தும் முயற்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.

கல்யாணத்தன்னிக்கு ஒன்னிய கூப்புட வேணாமுன்னு எங்காத்தாகாரி தான்டா எழவக்கூட்டிட்டா! அந்த வெளங்காத பய வம்சத்துல சாவுகாசம்(சகவாசம்) வைக்காதடான்டா! கேக்குறானா? ஒனக்கு எவனும் இத்தனை வருசமா பொண்ணுகுடுக்காததுக்குக்கூட நீயும் அவனும் சேர்ந்து சுத்துறது தான்டா காரணம்! ஏலே! சொன்னதக்கேக்கலன்னா இங்கனயே நாண்டுக்கு செத்துப் போவன்டா! கூந்தையனின் சமூக அடையாளத்தைப் பற்றித் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான் காக்காயன். இருந்த வீட்டையும் காக்காயனுக்கு தாரைவார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தான் கூந்தையன்.

எலும்பும் தோலுமாய் இருந்த கிழவரிடம், டாக்டரய்யா, பேரென்னப்பா? என்றவுடன் இருமலைத் தொடர்ந்ததொரு ஈனஸ்வரம் கரைந்தது கூந்தையனென்று. டிபி சீக்கு முத்துறவரைக்கும் என்ன பெரிசு பண்ணிக்கிட்ருந்த? சரி சரி! போ! போயி நர்ஸம்மாகிட்ட இந்த ஊசியும் மாத்திரையும் எடுத்துத்தரச்சொல்லி வாங்கிக்கிட்டுப் போ! எந்த மாத்திரையா இருந்தாலும் வகுத்துக்கு கஞ்சியோ கூலோ குடிச்சிட்டு முழுங்கு! புவர் பெல்லோ!

என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, முத்து முத்தாக பத்து தூக்கமாத்திரைகள் கையில் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. சிறுகச்சிறுக தன்னை தனித்துப் பிரித்து, இறுதியில் இருப்பதற்கொரு பெரிய சத்திரத்தையும் 4நாள் பசிக்காக பத்து மாத்திரைகளையும் சிருஷ்டித்த கடவுளைப் பார்த்து கடைசியாக ஏதோ சொல்ல நினைத்தவன், சுதாரித்துக்கொண்டு, கையைவிட்டுப் போவதற்குளாகவே அவசர அவசரமாய் முழுங்கிவிட்டான் மாத்திரை வரங்களை!

சத்திரத்தைக் கூட்டுமொரு பரதேவதை வந்து உற்றுப் பார்த்துவிட்டு, நிலைகுத்தி நின்ற கண்ணும், நெடுஞ்சாண் கிடப்பும், நெற்றியின் வெளிர்ப்பும், மந்தாகசப் புன்முறுவலும், மார்புக்கூடும் உற்றுப் பார்த்து ஒப்புவைத்தாள், ஊருக்கே கேட்குமாறு நெஞ்சில் அடித்துக்கொண்டு..., 

....யாத்தே! எந்தக் காட்டுப் பெயமகனோ? எந்தச் சிறுக்கி பெத்துப் போட்டாலோ? இப்பிடி அனாமத்தா அனாதப் பொணமா கெடக்கானே சிய்யான்!
தேர்கட்டித்தூக்க ஒனக்கெத்தன பிள்ளையோ!? தீப்பந்தம் புடிக்க எத்தன பேரனோ!?
எத்தனை ஊரக் கட்டி ஆண்டயோ? எத்தனபேரு ஒனக்கு சேவகம் செஞ்சாய்ங்களோ? எந்தூரு ராசாவோ?
........

இழப்பதற்கென வேறொன்றுமில்லையென்பேனென நினைத்தாயோ பரமனே!
இறுதியாய்! இதோ உனக்காய், ஆர்ப்பரிக்கும் கடலுடன்! அழகிய வனங்களுடன்! ஆயிரம் வேதனை சுமக்கும் மாந்தர்களுடன்! நான் வாழ நீ படைத்த உலகு உனக்கே!
ம்! நிமிர்ந்து பார்! வாங்கிக்கொள்!

Thursday, 24 November 2011

ஒரு பொண் மாலைப் பொழுது!

ஹிஹிஹி! ஆமா, அது ஒரு பொண்ணு பார்க்கப்போன மாலைப் பொழுது!

ரொம்ப நல்ல குடும்பத்து பெண் என்று தரகர் சொன்னப்பவே மிடறு விழுங்கி அமர்ந்தேன். அரைமணி நேரம் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எல்லாமே என்றால் எல்லாமே அல்ல, அந்த மைசூர்பாகை மட்டும் கடிக்கமுடியவில்லை, அதனால் அச்சுவெள்ளத்தை நக்குவதுபோலவே நக்கிக்கரைத்துவிட முயன்றுகொண்டிருந்ததில் உலக இம்சைகளிலிருந்து விலகி அரைமணி நேரம் ஓடிவிட்டது.

திடீரென்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தப்பன் முதுகில் தட்டி இயல்புக்குள் இறக்கிவிட்டுவிட்டார். நிதானித்துக்கொண்டு என்ன, என்னவென்று கேட்டதில், பொண்ணப்பெத்த புண்ணியவான் ஏதோ கேக்குறாரு பதில் சொல்லென்று, இதுவரை எந்த இன்டர்வியூவிலும் பதில் சொல்லாத என்னை முதன் முறையாக விரதம் கலைக்க வைத்தார்கள்.

முதல் கேள்வியே கவுண்டமணியை பார்த்து செந்தில் கேட்டது மாதிரியான ஒன்று. துக்கம் தொண்டையை அடைக்க உடனே ஒரு பதில் சொல்லிவிட்டேன். பயப்படவேண்டும், பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டேன் என்பதைதான் அவ்வாறு சொன்னேன்.

கேள்வி இதுதான்! தம்பி, உங்கள எல்லாருக்கும் புடிச்சிருக்கு, ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம், இந்த HIV டெஸ்ட் மட்டும் எடுத்துகிட்டு ரிசல்ட்ட கொண்டுவந்தீங்கன்னா மற்ற விசயத்த பேசிக்கலாம்?

நான்: சரிங்க மாமா சார், அதே போல ஒங்க வீட்லயும் பொண்ணோட அப்பா அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கான்னு ஒரு டெஸ்ட் எடுத்து குடுத்திட்டீங்கன்னா, தகுந்தமாதிரி செலவுக்கு வாங்கிகலாம்னு.... (பெற்றோருக்கு இருந்தா பெண்ணுக்கு வருமாம்ல) மத்தபடி இத வரதட்சணை கீழ வராதுன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.

எப்படியும் இந்த பொண்ணு அமைஞ்சிரனும்னு வர்றவழியில ஏசு சாமிலேருந்து எல்லா சாமிக்கும் மாலை போடுறதா வேண்டிகிட்டே வந்தேன். என்னங்க.... எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும்ல!

பின்குறிப்பு: இது என் சொந்தகதை என்ற பொய்யான வதந்தியை யாரும் நம்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அப்பாடா!

Monday, 21 November 2011

சாப விமோசனம்!

இந்தியாவ பத்தி யாராரோ கனவு காணும்போது இந்த மண்ணின் மைந்தன் நம்ம மாயாண்டி காண்பதில் எந்த தப்பும் இல்லைதானே. வருஷநாட்டுப்பக்கம் உள்காட்டு ஏரியாதான் அவன் உலகம். அப்பனும் ஆத்தாலும் செத்துப்போயி பலவருசமாச்சு. ஊருக்குள்ள என்பொண்ணக்கட்டிவைக்கிறேன்னு யாரு சொன்னாலும் சரி, அவங்கவீட்டுவேலையில இருந்து தோட்டவேலை வரைக்கும் எல்லாத்தையும் ஒத்தை ஆளா முடிச்சு குடுக்கிறதுதான் அவன் பொழப்பே!.

மாயாண்டிக்கு என்ன வயசாச்சுன்னு தெரியல. ஆனா மேலே சொன்னபடி இவன் கட்டாமல் விட்ட பெண்களெல்லாம் கல்யாணமாகி, அவர்களுக்கு இப்போது கல்யாண வயதில் பெண்ணே இருக்கிறார்கள். சரி சரி விடுங்க, இப்போ மேட்டருக்கு வருவோம்.

என்னதான் உலகமே இவனுக்கு உதவவில்லையென்றாலும் அவனுக்கு உலக அமைதியில் பெரும் பங்கு உள்ளது. அவன் ஓட்டுப்போட்ட கட்சிதான் இதுவரை ஆட்சிக்கு வந்து இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்ததும் அதில் ஒரு காரணம்.

இன்று என்னமோ ரொம்பவே எரிச்சலாக வந்ததில், செட்டியார் தோப்பில் காலை நீட்டி படுத்துக்கொண்டான். உறக்கமும் நினைவுமான ஒரு மயக்கநிலையில் தான் காற்றில் தவழ்ந்து வந்தது அந்த ஞானோதயக் காற்று. இந்தியாவின் மக்கள்தொகை நூறுகோடிக்கு மேல் சென்றுவிட்டது என்றும் விலைவாசி எல்லாம் ஏறிவிட்டதென்றும் ரேடியோ பொட்டி சொல்லிக்கொண்டிருந்தது. தன்னால் என்னென்ன செய்யமுடியுமென யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். என்ன நடந்தாலும் சரி, கல்யாணம் மட்டும் பண்ணிக்கொள்வதில்லை என்று தீர்மானித்தான்.

கம்பீரமாக ஊருக்குள் நடந்து வந்தான். டேய்! மாப்பிள்ளை இந்த மாட்ட புடிச்சு கட்டிவச்சுட்டு போடான்னு கூப்பிட்டுக்கொண்டிருந்த ராமசாமி மாமாவின் குரல் காதில் விழாதது போல் நடந்துகொண்டே இருந்தான். பாவம் அன்று முதல் அவன் கஞ்சிக்கே கஷ்டப்பட்டானென்ற கதையை தொடர மனசு வரவில்லை. சரி விடுங்க, நமக்கெதுக்கு அது!

Thursday, 13 October 2011

தூற்றுவார் தூற்றட்டும்! போற்றுவார் போற்றட்டும்!


Forgotten Basics - Part I
One day a farmer's donkey fell down into a well. The animal cried piteously for ......hours as the farmer tried to figure out what to do. Finally, he decided the animal was old, and the well needed to be covered up anyway; it just wasn't worth it to retrieve the donkey.

He invited all his neighbors to come over and help him. They all grabbed a shovel and began to shovel dirt into the well. At first, the donkey realized what was happening and cried horribly. Then, to everyone's amazement he quieted down.

A few shovel loads later, the farmer finally looked down the well. He was astonished at what he saw. With each shovel of dirt that hit his back, the donkey was doing something amazing. He would shake it off and take a step up.

As the farmer's neighbors continued to shovel dirt on top of the animal, he would shake it off and take a step up. Pretty soon, everyone was amazed as the donkey stepped up over the edge of the well and happily trotted off!

MORAL :
Life is going to shovel dirt on you, all kinds of dirt. The trick to getting out of the well is to shake it off and take a step up. Each of our troubles is a steppingstone. We can get out of the deepest wells just by not stopping, never giving up! Shake it off and take a step up.

Remember the five simple rules to be happy:

1. Free your heart from hatred - Forgive.

2. Free your mind from worries - Most never happens.

3. Live simply and appreciate what you have.

4. Give more.

5. Expect less from people but more from God.

You have two choices... smile and close this page,
or pass this along to someone else to share the lesson .
-Anon.