வெள்ளை நிற டெம்போ
டிராவலர் வண்டி ஹைதராபாத்தை விட்டு நாகார்ஜூன சாகரை நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்ததது.
கண்ணாடி ஜன்னல்களெல்லாம் திரையிட்டு மூடப்பட்டிருந்ததால் உள்ளே நடப்பது வெளியே தெரியாது.
ரோட்டோரமாக வண்டியை
நிறுத்தி உள்ளிருந்து காவல்துறை சீருடையணிந்த இருவர் இறங்கியதும் அசீத் கேட்டான்,
“டேய் விசை! இதுக்குப்பேரு
தான் இருட்டறைக்குள் முரட்டுக் குத்தாடா”
இங்கு தொடங்குகிறது
நம் கதை!
”ஏண்டா! இன்னுமாடா
நீங்க திருந்தல?” கேட்டது பெருந்தொப்பை ஏட்டைய்யா.
”அப்டி என்னதான்
சார் தப்பு பண்ணாய்ங்க?” டிபார்ட்மெண்டின் புதுவரவு ஏட்டைய்யா.
மொளகா வத்தல் கடைக்கார
செட்டியாரு வரும் போது இந்த அசீத் குமார் பெய தும்மிருக்கான். அவரு வீட்டுக்குப்போனதும்
நாண்டுக்கு தொங்கிட்டாரு.
ஐய்யய்யோ! அந்த
அளவுக்கு போயிருச்சா ஏட்டைய்யா? சரி கூட இருக்கவன் என்ன செஞ்சான்?
அவந்தான்யா பதில்
தும்மல் தும்மிருக்கான்.
ஓ! அப்ப கன்பார்ம்
தும்மல் விசையோடதுன்னு சொல்லுங்க.
அட! ஆமாய்யா! நம்ம
இன்ஸ்பெக்ட்ரு சார் பத்தி தெரியும்ல? அவரு அணைக்கட்டுக்கு கூட்டி போனவன் எவனும் உசுரோடவோ
பொணமாவோ கூட திரும்பினதில்ல.
அதான் ஒனக்கு அடிச்சு
பிராக்டிசு ஆகட்டுமேன்னு வழிநெடுக அடிக்கவிட்டு கூட்டியாந்தேன்.
இதற்கிடையே இருள்சூழ்
வண்டிக்குள்….
அசீத்து,
ஏண்டா நேரங்காலந்தெரியாம! இங்க வர்றதுக்குப் போயி இம்புட்டு பவுடர அப்பிருக்க?
விசையண்ணே! நீங்க
மட்டும் என்னவாம்? எதுக்கு பச்சை சட்டை செகப்பு பேண்ட் போட்டு வந்திருக்கீங்க?
எப்டியோ என்கவுண்டர்
பண்ணதுக்கப்புறம் பொணத்தோட மூஞ்சிய குளோசப்ல டிவில காட்டும் போது ஒரு பொண்ணுக்காச்சும் புடிக்கும்ல. செத்தும் கரெக்ட் பண்ணிய காவியக் கட்டழகன்னு இச்டீடீ பேசவேணாமா? அதுக்குத்தான்.
கரெக்ட் கரெக்ட்!
சரி, நீ எதுக்கு இந்த பேண்ட் சட்டை போட்டு வந்தன்னு சொல்லு?
பச்சை சட்டை போட்டவன
பக்கத்துல வச்ச சுடுறதுக்கும் மத்தவய்ங்கள ஓடவிட்டு சுடுறதுக்கும் பழகுனவறாம் இந்த
இன்ஸ்பெக்டரு. ஒரு புக்ல படிச்சிருக்கேன்.
அடத்துரோகி!
டேய்! என்னடா அங்க
சத்தம்? இன்ஸ்பெக்டரய்யா வரச்சொல்றாரு. எறங்கி வாங்கடா!
சரக் சரக்…..
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…..
ஊ ஊஊஊ ஊஊஊ….
தம்பிங்களா! ஒங்க
ரெண்டுபேத்தையும் ஏன் நான் இங்க கொண்டுவந்தேன் தெரியுமா?
என்னையும் விசையையும்
என்கவுண்டர் பண்ணத்தானங்யா? பண்ணுங்கய்யா பண்ணுங்க? ஆனா, கடைசியா ஒருதடவ காயத்ரி மந்த்ரம் சொல்லி கங்காஸ்நானம் பண்ணிக்கிட அனுமதி கொடுங்கய்யா. போற எடத்துக்கு புண்ணியமா....
மன்னிச்சிருங்க
தம்பிகளா. ஒங்கள கூட்டிவந்தது என்கவுண்டருக்காக இல்ல. நீங்க பண்ண சமுதாயச்சீர்கேட்டால
ஒரு உயிர் போயிருச்சு. அதுவும் மொளகா வத்தக்கடை ஓனரு. ஊருக்குள்ள பெரியமனுசன். அதனால,
மொளகாக்கடை செட்டியார்கள் சங்கத்துல இருந்து எங்களுக்கு ரொம்ப பிரசரு. வேற வழியில்லாம
ஒங்க ரெண்டுபேத்தையும் அரெஸ்ட் பண்ணிட்டோம். எங்களுக்கு இதத்தவிற
வேற வழி தெரியல.
சார்!!!!!!!!!!!!!
ஆமா! தம்பிகளா. எனக்கும்
மகன் மகள் இருக்காங்க. என் சொந்தத்துலயும் ஒன்னமாதிரி பெரிய மூக்கு வச்ச தும்மல்வாதிகள்
இருக்காங்க. அதெல்லாம் நெனச்சுத்தான்…..
விசைக்கு தலை கொடராட்டினம்
போல் சுத்தியது. பொத்தென்று விழுந்தான்.
தண்ணி தெளித்து
எழுப்பியதும்,
“இரண்டுபேரும்
பொடி நடையா நடந்து ஊரு வந்து சேருங்க. அதுக்குள்ள ஊரு சகஜநிலைக்குத் திரும்பிரும்”னு
இன்ஸ்பெக்டர் சொல்லி வாய்மூடல… ரெண்டு தம்பிகளும் ரெண்டுகாலையும் கட்டிபுடிச்சுக்கிட்டு
கதற ஆரம்பித்திருந்தார்கள்.
ஐயா! இன்ஸ்பெக்டரய்யா!
தெய்வமே! ஊருக்குள்ள ஏகப்பட்ட கடன். எப்படியாவது நீங்க என்கவுண்டர் பண்ணிடுவீங்கன்ற
தைரியத்துல மிஞ்சஞ்சொச்ச ஆளுக கிட்டயும் கடன வாங்கி பவுடர் டப்பாவும் புதுச்சட்டை பேண்ட்டும்
போட்டுக்கிட்டு பகுமானமா வந்துட்டோம். இப்டி கைவிட்டீங்கன்னா நாங்க எங்க போவோம்? எங்களுக்கு
யாரத்தெரியும்? எங்களுக்கு தற்கொலை பண்ணக்கூட புரசீசர் தெரியாதே சாமீ!?
என்க்கவுண்டரய்யா!
நீங்க அப்டியெல்லாம் திடீர்னு நல்லவரா மாறக்கூடாது. கொஞ்சம் பழச நெனச்சுப்பாருங்க.
நீங்க ஒரு சிங்கம். இப்டி நீங்களெல்லாம் நல்லவங்களா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா
திண்டுக்கல்ல இருந்து மௌன இன்ஸ்பெக்டரவாச்சும் வரச்சொல்லி ரெக்வஸ்ட் லெட்டர் குடுத்திருப்போம்ல.
இப்டி கடைசி நிமிசத்துல கால வாரி விடுறது ஒரு
பொறுப்புள்ள அதிகாரிக்கு அழகா? ஐயா! எங்க
பொண்டாட்டி கொழந்த குட்டிகளெல்லாம் உங்க போட்டோவ வச்சு கும்புடும். தயவுசெஞ்சு துப்பாக்கிய
எடுங்கய்யா. தயவுகாட்டுங்க கருணாமூர்த்தியே!
அனைவரது முகத்திலும்
ஒரு கலவரம்.
டிக்
டிக்
டிக்
.
.
.
நிசப்தம்
திடீரென இன்ஸ்பெக்டர்
வாகனத்தைத் தாண்டி காட்டுக்குள் ஓட ஆரம்பித்திருந்தார்.
.
,
,
சில மாதங்களுக்குப்
பிறகு,
ஐயா, காடு புல்லா
தேடிட்டோம். தடயவியல் நிபுணர்கள வச்சு தேடுனதுல மொத்தம் 6 கால் தடம். 4 நம்மாளுகளோடது.
2 செருப்பில்லாத கால் தடம். ஒவ்வொரு ஒரு மாச இடைவெளில சூ போட்ட கால் தடங்களும் செருப்பில்லாத
கால் தடங்களும் புதுசா பதிஞ்சுகிட்டே இருந்திருக்கு. தொல்லியல் துறையோட அறிக்கைப்படி,
நமக்கு கடைசியா கிடைச்ச கால் தடத்தோட கடைசி
பதிவு இன்னைக்கு காலைல 5.30க்கு.
.
.
.
வரும்!
வரும்!
வரும்!
வரும்!